ரஞ்சி கிரிக்கெட்டில் விதர்பாவுக்கு எதிரான அரைஇறுதி ஆட்டம்: தோல்வியின் விளிம்பில் கர்நாடகா


ரஞ்சி கிரிக்கெட்டில் விதர்பாவுக்கு எதிரான அரைஇறுதி ஆட்டம்: தோல்வியின் விளிம்பில் கர்நாடகா
x
தினத்தந்தி 20 Dec 2017 8:30 PM GMT (Updated: 20 Dec 2017 8:20 PM GMT)

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் விதர்பாவுக்கு எதிரான அரைஇறுதி ஆட்டத்தில் கர்நாடகா அணி தோல்வியின் விளிம்பில் உள்ளது.

கொல்கத்தா,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் விதர்பாவுக்கு எதிரான அரைஇறுதி ஆட்டத்தில் கர்நாடகா அணி தோல்வியின் விளிம்பில் உள்ளது.

ரஞ்சி கிரிக்கெட்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில், கர்நாடகம்-விதர்பா அணிகள் இடையிலான அரைஇறுதி ஆட்டம் கொல்கத்தாவில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே விதர்பா 185 ரன்களும், கர்நாடகா 301 ரன்களும் எடுத்தன. 116 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய விதர்பா அணி 3-வது நாள் முடிவில் 47 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்திருந்தது. கணேஷ் சதீஷ் 71 ரன்னுடனும், வாத்கர் 19 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய வாத்கர் 28 ரன்னிலும், கணேஷ் சதீஷ் 81 ரன்னிலும் வெளியேறினர். விதர்பா அணி 2-வது இன்னிங்சில் 84.1 ஓவர்களில் 313 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. கடைசி விக்கெட்டாக ஆதித்ய சர்வாதே 55 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

இதையடுத்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கர்நாடக அணி 2-வது இன்னிங்சை ஆடியது. விதர்பா அணி வீரர்களின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் கர்நாடகாவின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் கர்நாடகா அணி 2-வது இன்னிங்சில் 43 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இன்னிங்சில் சதம் அடித்த கருண்நாயர் 30 ரன்னிலும், சமர்த் 24 ரன்னிலும், கவுதம் 24 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். கேப்டன் வினய்குமார் 19 ரன்னுடனும், ஸ்ரேயாஸ் கோபால் 1 ரன்னுடனும் களத்தில் இருக்கிறார்கள். விதர்பா அணி தரப்பில் குர்பானி 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

தோல்வியின் விளிம்பில் கர்நாடகம்

இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. கர்நாடக அணியின் வெற்றிக்கு மேலும் 87 ரன்கள் எடுக்க வேண்டியது இருக்கிறது. அந்த அணி கைவசம் 3 விக்கெட் மட்டுமே உள்ளது. எனவே இந்த ஆட்டத்தில் கர்நாடக அணி தோல்வியின் விளிம்பில் நிற்கிறது. இதனால் விதர்பா அணி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேற பிரகாசமான வாய்ப்பு நிலவுகிறது.

Next Story