‘யோ–யோ’ சோதனையில் தேறினார், ரெய்னா


‘யோ–யோ’ சோதனையில் தேறினார், ரெய்னா
x
தினத்தந்தி 21 Dec 2017 8:45 PM GMT (Updated: 21 Dec 2017 8:09 PM GMT)

‘யோ–யோ’ என்ற உடல்தகுதி தேர்வில் தேறும் வீரர்கள் மட்டுமே இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்கு பரிசீலிக்கப்படுவார்கள்.

பெங்களூரு,

‘யோ–யோ’ என்ற உடல்தகுதி தேர்வில் தேறும் வீரர்கள் மட்டுமே இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்கு பரிசீலிக்கப்படுவார்கள் என்ற கொள்கையை கிரிக்கெட் வாரியம் தற்போது தீவிரமாக கடைபிடித்து வருகிறது. இரண்டு கோடுகள் போடப்பட்டு அதன் நடுவில் 20 மீட்டர் தூரத்தை குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட ரவுண்டுகள் வேகமாக ஓடி முடிக்க வேண்டும். இது தான் ‘யோ–யோ’ சோதனை ஆகும். இந்திய மிடில் வரிசை பேட்ஸ்மேன் 31 வயதான சுரேஷ் ரெய்னா, இந்த உடல்தகுதி தேர்வில் சோபிக்காததால் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.

இந்த நிலையில்ரெய்னா ஒரு வழியாக ‘யோ–யோ’ சோதனையில் வெற்றி பெற்றிருக்கிறார். இது குறித்து ரெய்னா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் கடுமையாக மேற்கொண்ட பயிற்சிக்கு பிறகு இன்று (நேற்று) யோ–யோ தேர்வில் தேர்வு அடைந்தேன். அங்குள்ள பயிற்சியாளர்கள், உடல்தகுதி நிபுணர்கள், அதிகாரிகள் எனக்கு அளித்த ஆதரவும், ஊக்கமளிப்பும் வியப்பூட்டியது. அவர்களுக்கு எனது நன்றி’ என்றார்.


Next Story