கிரிக்கெட்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உகாண்டாவில் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளோம் - சயீத் அஜ்மல் + "||" + Pakistani cricketers stuck in Uganda Saeed Ajmal says We are safe and happy

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உகாண்டாவில் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளோம் - சயீத் அஜ்மல்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உகாண்டாவில் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளோம் - சயீத் அஜ்மல்
ஊதிய பிரச்சினையால் நாடு திரும்ப முடியாமல் பாகிஸ்தானின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் உகாண்டாவில் தவித்து வருகின்றனர் என செய்திகள் வெளியாகியது.
இஸ்லாமாபாத்,

 
பாகிஸ்தான் செய்தி மீடியாக்களில் வெளியாகிய செய்திகளில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான சயீத் அஜ்மல், யாசீர் அகமது, இம்ரான் பர்கத் உளிட்ட 20 வீரர்கள் உகாண்டாவில் நடைபெறுவதாக இருந்த 20 ஓவர் லீக் தொடரில் பங்கேற்க சென்றனர். பாகிஸ்தான் வீரர்கள் உகாண்டாவில் உள்ள கம்பலாவுக்கு சென்றதும், பண வரவு செலவு பிரச்சினை காரணமாக, 20 லீக் தொடர் ரத்து செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் வீரர்கள் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டதில் 50 சதவீத தொகையையாவது சம்பளமாக தருமாறு உகாண்டா கிரிக்கெட் அமைப்பிடம் கோரிக்கை வைத்தனர்.

 முதலில் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உகாண்டா கிரிக்கெட் அமைப்பு, பிறகு லீக் தொடரை நடத்த முன்வந்த ஸ்பான்சர்ஸ் பின்வாங்கியதாக கூறி ஊதியத்தை அளிக்க மறுத்து உள்ளது. இதனால், உகாண்டாவில் தவித்த வீரர்கள், அந்நாட்டில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் தகவல் தெரிவித்து உள்ளனர். மேலும், தங்கள் நாட்டு கிரிக்கெட் வாரியத்திடமும் தெரிவித்து உள்ளனர். பாகிஸ்தான் தூதரகம் வீரர்கள் நாடு திரும்புவதற்கான வசதிகளை செய்து வருவதாக தெரிவித்துள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இன்று மாலைக்குள் பாகிஸ்தான் புறப்பட்டு விடுவோம் என நம்புவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்துள்ளனர் எனவும் செய்திகள் வெளியாகியது.

இப்போது இச்செய்திகளை நிராகரிக்கும் வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அஜ்மல் “நாங்கள் அனைவரும் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளோம், கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைதியாக இருக்கிறோம்,” என கூறிஉள்ளார். கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. உகாண்டா: படகு ஏரியில் கவிழ்ந்த விபத்தில் 30 பேர் பலி
உகாண்டா நாட்டில் உல்லாசப் படகு ஒன்று ஏரியில் கவிழ்ந்த விபத்தில் 30 பேர் பலியாயினர்.
2. உலகைச்சுற்றி...
உகாண்டாவில் பலத்த மழையால் மண் சரிவு ஏற்பட்டு, 34 பேர் பலியாகி உள்ளனர்.