கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அதிவேக சதம் அடித்து ரோகித் சர்மா சாதனை! + "||" + KL Rahul gets fifty after Rohit Sharma equals fastest T20 ton record

இலங்கைக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அதிவேக சதம் அடித்து ரோகித் சர்மா சாதனை!

இலங்கைக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அதிவேக சதம் அடித்து ரோகித் சர்மா சாதனை!
இலங்கைக்கு எதிரான 2வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அதிவேக சதம் அடித்து ரோகித் சர்மா சாதனை படைத்தார்.

இந்தூர்,


இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. கட்டாக்கில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2–வது 20 ஓவர் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று நடக்கிறது. 
போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது, இதனையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடுகிறது. இரு அணியிலும் மாற்றம் கிடையாது. இலங்கை அணியின் பந்துவீச்சை தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் நாலாபுறமும் சிதறடித்தனர். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக அதிவேக சதம் அடித்து சாதனை படைத்தார். இலங்கை அணியின் பந்துவீச்சால் பிரிக்க முடியாத கூட்டணி ஜெட் வேகத்தில் செல்ல தொடங்கியது. 

11.2 வது ஓவரில் மேத்யூஸ் பந்துவீச்சில் பவுண்டரி அடித்து ரோகித் சர்மா சதத்தை அடைந்தார். அப்போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கரகோஷம் எழுப்பினர். சர்வதேச போட்டிகளில் அடித்த அதிவேக சதமாகும். 12 வது ஓவரிலும் அதிரடி காட்டினார், முதல் மூன்று பந்துகளை முறையே சிக்சர், பவுண்டரி மற்றும் சிக்சர் என அடித்த ரோகித் சர்மா 12.4 வது ஓவரில் விக்கெட்டை இழந்தார். 45 பந்துகளை எதிர்க்கொண்ட ரோகித் சர்மா (118 ரன்கள்) 12 பவுண்டரிகள், 10 சிக்சர்கள் அடித்து அதிரடிகாட்டினார். 12.4 வது ஓவரில் ஷாட் அடித்து கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 

ரோகித் சர்மா 35 பந்துகளில் சதம் அடித்து 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில அதிவேகமாக சதம் அடித்தவர்கள் வீரர்கள் பட்டியலில் டேவிட் மில்லர் சாதனையை சமன் செய்தார். லோகேஷ் ராகுலுடன், முன்னாள் கேப்டன் டோனி களமிறங்கி விளையாடி வருகிறார். இந்திய அணி 15 ஓவர்களுக்கு ஒரு விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களுடன் விளையாடி வருகிறது. டோனி 12 ரன்களுடனும், லோகேஷ் ராகுல் 62 ரன்களுடனும் களத்தில் விளையாடி வருகிறார்கள்.  தொடர்புடைய செய்திகள்

1. இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி மீண்டும் வெற்றி
இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: போட்டியில் இந்திய பெண்கள் அணி மீண்டும் வெற்றிபெற்றது.
2. இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி வெற்றி
இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி வெற்றிபெற்றது.
3. மறுவாழ்வு திட்டங்கள் முழுமையாக கிடைக்கவில்லை: இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்கள் தேயிலை தோட்டங்களில் அவதி
மறுவாழ்வு திட்டங்கள் முழுமையாக கிடைக்காமல் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்கள் தேயிலை தோட்டங்களில் அவதிப்பட்டு வருகின்றனர்.
4. ஜெகதாப்பட்டினம் விசைப்படகில் இலங்கை கடற்படையினர் படகால் மோதினர் 6 மீனவர்களை பிடித்து சென்றனர்
நெடுந்தீவு அருகே கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த ஜெகதாப்பட்டினம் விசைப்படகில் இலங்கை கடற்படையினர் படகால் மோதினர். பின்னர் அதில் இருந்த 6 மீனவர்களையும் அவர்கள் பிடித்து சென்றனர்.
5. இலங்கைக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணி படுதோல்வி
இலங்கைக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட்போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி படுதோல்வி அடைந்தது.