கிரிக்கெட்

‘கோலியை விட சுமித்தே சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்’ ஷேன் வார்னே சொல்கிறார் + "||" + 'Than koli Sumiteth Best Test Batsman Says Shane Warne

‘கோலியை விட சுமித்தே சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்’ ஷேன் வார்னே சொல்கிறார்

‘கோலியை விட சுமித்தே சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்’ ஷேன் வார்னே சொல்கிறார்
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே, பத்திரிகை ஒன்றுக்கு எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:–

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே, பத்திரிகை ஒன்றுக்கு எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:–

என்னை பொறுத்தவரை ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் தான் தற்போது உலகின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆவார். இந்திய கேப்டன் விராட் கோலி மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் சிறந்தவர் தான். ஆனால் 5 நாட்கள் ஆடும் டெஸ்ட் போட்டியில் ஸ்டீவன் சுமித்தே முந்துகிறார்.

ஒரு தேர்ந்த பேட்ஸ்மேன் என்றால் மூன்று நாடுகளில் சதம் அடிக்க வேண்டும் என்று நான் நினைப்பது உண்டு. இங்கிலாந்தில் ‘டியூக்’ வகை பந்துகளை எதிர்கொள்வதோடு, ‘ஸ்விங்’ ஆகும் ஆடுகளத்தன்மை இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் பந்து வேகமாக எகிறி (பவுன்ஸ்) சீறிப்பாயும். தூசி கிளம்பும் இந்திய ஆடுகளங்களில் பந்து சுழன்று எழும்பும். இந்த மூன்று நாடுகளிலும் சதம் விளாசும் வீரரையே சிறந்த பேட்ஸ்மேனாக ஏற்றுக்கொள்வேன்.

கோலியின் சுயவிவர பட்டியலை எடுத்துக் கொண்டால், அவர் இங்கிலாந்து மண்ணில் (5 டெஸ்டில் 134 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்) சரியாக ஆடவில்லை என்பது தெரிய வரும். இதுவே அவருக்கு பயங்கரமான நெருக்கடியாக இருக்கும். ஆனால் உள்ளூரில் தொடர்ந்து இரட்டை சதங்களை நொறுக்கும் விராட் கோலி அந்த மேஜிக்கை, அடுத்த ஆண்டு இங்கிலாந்து பயணத்திலும் கொண்டு செல்ல முனைப்பு காட்டுவார் என்று கருதுகிறேன்.

இவ்வாறு ஷேன் வார்னே அதில் எழுதியுள்ளார்.

தான் பார்த்த, உடன் விளையாடிய மற்றும் எதிர்கொண்ட வீரர்களில் இருந்து சிறந்த பேட்ஸ்மேன்கள் பட்டியலை வார்னே வெளியிட்டுள்ளார். அதில் டாப்– 3 இடங்களை வெஸ்ட் இண்டீசின் விவியன் ரிச்சர்ட்ஸ், பிரையன் லாரா, இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் ஆகியோருக்கு வழங்கியுள்ளார். ஆஸ்திரேலியாவின் கிரேக் சேப்பல், ரிக்கிபாண்டிங், ஆலன் பார்டர், தென்ஆப்பிரிக்காவின் காலிஸ், இங்கிலாந்தின் கிரஹாம் கூச், தென்ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் ஆகியோர் அடுத்த இடங்களில் வருகிறார்கள். அவரது பார்வையில் சுமித்தும், கோலியும் 10–வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.