டோனி, ரெய்னாவை தக்கவைக்க சென்னை சூப்பர் கிங்ஸ் முடிவு


டோனி, ரெய்னாவை தக்கவைக்க சென்னை சூப்பர் கிங்ஸ் முடிவு
x
தினத்தந்தி 23 Dec 2017 8:30 PM GMT (Updated: 23 Dec 2017 8:20 PM GMT)

சூதாட்ட பிரச்சினையால் 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தடை காலம் முடிந்ததால் அடுத்த ஆண்டு நடக்கும் 11–வது ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கிறது.

சென்னை,

சூதாட்ட பிரச்சினையால் 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தடை காலம் முடிந்ததால் அடுத்த ஆண்டு நடக்கும் 11–வது ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கிறது. ஒவ்வொரு அணியும் 5 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள ஐ.பி.எல். நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. அதாவது 3 வீரர்களை நேரடியாக தக்க வைத்துக் கொள்ள முடியும். இரு வீரர்களை ஏலத்தின் போது மேட்ச் கார்டை பயன்படுத்தி எடுக்கலாம்.

இந்த நிலையில் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முந்தைய சீசனில் தங்கள் அணிக்காக வெற்றிகரமாக செயல்பட்ட டோனி, சுரேஷ் ரெய்னா ஆகியோரை தக்க வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது. 3–வது வீரராக ரவீந்திர ஜடேஜா அல்லது அஸ்வின் ஆகியோரில் ஒருவர் இழுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்டியலை ஜனவரி 4–ந்தேதிக்குள் அனுப்பி வைக்க ஐ.பி.எல். நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ஏலத்தில் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக ரூ.80 கோடி செலவு செய்யலாம். சென்னை அணி மூன்று வீரர்களை தக்கவைக்கும் பட்சத்தில், அவர்களுக்குரிய ஊதியமாக ரூ.33 கோடி ஒதுக்கப்படும். இது ஒட்டுமொத்த ஏலத்தொகையில் இருந்து கழிக்கப்படும்.


Next Story