கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு அஸ்வின், ஜடேஜாவுக்கு மீண்டும் இடமில்லை + "||" + One Day Against South Africa Series: Indian team announcement Aswin, Jadeja has no place again

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு அஸ்வின், ஜடேஜாவுக்கு மீண்டும் இடமில்லை

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு அஸ்வின், ஜடேஜாவுக்கு மீண்டும் இடமில்லை
இந்திய கிரிக்கெட் அணி வருகிற 27–ந்தேதி தென்ஆப்பிரிக்காவுக்கு புறப்படுகிறது. அங்கு 3 டெஸ்ட், 6 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி வருகிற 27–ந்தேதி தென்ஆப்பிரிக்காவுக்கு புறப்படுகிறது. அங்கு 3 டெஸ்ட், 6 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது. இதில் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்த நிலையில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி நேற்று தேர்வு செய்யப்பட்டது. இதன்படி மூத்த சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மீண்டும் ஒரு முறை புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்கள். லோகேஷ் ராகுலுக்கும் இடம் கிட்டவில்லை. அதே சமயம் ஓய்வு அளிக்கப்பட்ட கேப்டன் விராட் கோலி, முகமது ‌ஷமி அணிக்கு திரும்புகிறார்கள். இலங்கை தொடரில் சிறப்பாக ஆடியதால் ஸ்ரேயாஸ் அய்யர் இடத்தை தக்க வைத்துக் கொண்டார். காயத்தால் இலங்கை தொடரில் இருந்து கடைசி நேரத்தில் விலகிய கேதர் ஜாதவும் அழைக்கப்பட்டு இருக்கிறார்.

17 பேர் கொண்ட இந்திய அணி வருமாறு:– விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், ரஹானே, ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், டோனி, ஹர்திக் பாண்ட்யா, அக்‌ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர்குமார், பும்ரா, முகமது ‌ஷமி, ‌ஷர்துல் தாகுர்.

இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி பிப்ரவரி 1–ந்தேதி டர்பனில் நடக்கிறது.தொடர்புடைய செய்திகள்

1. வீராட் கோலி-மீராபாய் சானு ஆகியோருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரை
கிரிக்கெட் வீரர் வீராட் கோலி, பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு ஆகியோருக்கு ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருது வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
2. பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியை வீழ்த்தி இலங்கை ஆறுதல் வெற்றி
இந்தியா – இலங்கை பெண்கள் அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கட்டுநாயகேவில் நேற்று நடந்தது.
3. 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம் முதல் ஆட்டத்தில் இலங்கை–வங்காளதேசம் மோதல்
இந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் இன்று தொடங்குகிறது.
4. இலங்கைக்கு எதிரான 2–வது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி மீண்டும் வெற்றி
இலங்கைக்கு எதிரான 2–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி 7 ரன் வித்தியாசத்தில் வெற்ற
5. ‘இந்திய கிரிக்கெட் அணி முன்னேற்றம் காண வீரர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்’ விராட்கோலிக்கு, கங்குலி அறிவுரை
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் இந்திய அணி 1–4 என்ற கணக்கில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து கேப்டன் விராட்கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் மீது விமர்சனம் எழுந்துள்ளது.