கிரிக்கெட்

ஜிம்பாப்வேக்கு எதிரான 4 நாள் டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க வீரர் மார்க்ராம் சதம் + "||" + day Test against Zimbabwe: South African Marcham century

ஜிம்பாப்வேக்கு எதிரான 4 நாள் டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க வீரர் மார்க்ராம் சதம்

ஜிம்பாப்வேக்கு எதிரான 4 நாள் டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க வீரர் மார்க்ராம் சதம்
தென்ஆப்பிரிக்கா – ஜிம்பாப்வே அணிகள் இடையே 4 நாள் கொண்ட பகல்–இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நேற்று தொடங்கியது.

போர்ட் எலிசபெத்,

தோள்பட்டை மற்றும் முதுகுவலியில் இருந்து மீண்டு வந்த தென்ஆப்பிரிக்க கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ், கடந்த வாரம் வைரஸ் காய்ச்சலால் திடீரென பாதிக்கப்பட்டதால் அவரால் முழு உடல்தகுதியை எட்ட முடியவில்லை. இதனால் தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பொறுப்பை டிவில்லியர்ஸ் ஏற்றார். மோர்னே மோர்கலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதால் ஸ்டெயினுக்கு இடம் கிடைக்கவில்லை.

‘டாஸ்’ ஜெயித்த தென்ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது. எய்டன் மார்க்ராமும், டீன் எல்கரும் இன்னிங்சை தொடங்கினர். நல்ல தொடக்கம் தந்த இந்த ஜோடி 72 ரன்களை (21.3 ஓவர்) எட்டிய போது பிரிந்தது. எல்கர் 31 ரன்களிலும், அடுத்து வந்த அம்லா 5 ரன்னிலும் கேட்ச் ஆனார்கள்.

இதன் பின்னர் மார்க்ராமுடன், கேப்டன் டிவில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். 2016–ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் கால்பதித்த டிவில்லியர்ஸ் தனது பங்குக்கு 53 ரன்கள் (65 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தார். தொடர்ந்து பவுமா ஆட வந்தார். இன்னொருபுறம் நிலைத்து நின்று அசத்திய மார்க்ராம் பவுண்டரி அடித்து தனது 2–வது சதத்தை பூர்த்தி செய்தார்.

60 ஓவர் முடிந்திருந்த போது தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 229 ரன்கள் எடுத்திருந்தது. மார்க்ராம் 111 ரன்களுடனும், பவுமா 27 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருந்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஜிம்பாப்வே: தனியார் பேருந்துடன் கரும்பு லாரி மோதல் - 12 பேர் பலி
ஜிம்பாப்வே நாட்டில், தனியார் பேருந்துடன் கரும்பு லாரி மோதிய விபத்தில் 12 பேர் பரிதாபமாக பலியாகினர்.
2. ஜிம்பாப்வேயில் பஸ் தீப்பிடித்தது 42 பேர் பரிதாப சாவு
ஜிம்பாப்வே நாட்டின் ஜாவிஷாவானே நகரத்தில் இருந்து தென் ஆப்பிரிக்காவின் மியூசினா நகருக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு பஸ் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.
3. ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி டெஸ்ட்: முஷ்பிகுர் ரஹிம் இரட்டை சதத்தால் வங்காளதேச அணி 522 ரன்கள் குவிப்பு
ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், முஷ்பிகுர் ரஹிம் இரட்டை சதத்தால் வங்காளதேச அணி 522 ரன்கள் குவித்தது.
4. ஜிம்பாப்வே நாட்டில் பேருந்துகள் மோதல்: 47 பேர் பலியான பரிதாபம்
ஜிம்பாப்வே நாட்டில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 47 பேர் பலியாகினர்.
5. ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: வங்காளதேச அணிக்கு 321 ரன்கள் இலக்கு
ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், வங்காளதேச அணிக்கு 321 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.