கிரிக்கெட்

குறுகிய வடிவிலான கிரிக்கெட்டில் கோலியை விட ரோகித் சர்மா சிறந்தவர் + "||" + Rohit Sharma is better than Koli in short-form cricket

குறுகிய வடிவிலான கிரிக்கெட்டில் கோலியை விட ரோகித் சர்மா சிறந்தவர்

குறுகிய வடிவிலான கிரிக்கெட்டில் கோலியை விட ரோகித் சர்மா சிறந்தவர்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் தேர்வு குழு தலைவருமான சந்தீப் பட்டீல் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:–

மும்பை,

நான் இப்படி கூறுவது விராட் கோலியின் ரசிகர்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் தற்போது ரோகித் சர்மா சிறந்த பேட்ஸ்மேன் என்பதை சொல்லித் தான் ஆக வேண்டும். விராட் கோலி ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் துளியும் சந்தேகமில்லை. அவர் இந்தியாவின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக விளங்குகிறார். ஆனால் குறுகிய வடிவிலான போட்டி (ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி) என்று வரும் போது கோலியை விட ரோகித் சர்மா முந்துகிறார்.

இந்த ஆண்டில் குறுகிய வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் ரோகித் சர்மாவின் பேட்டிங் நம்ப முடியாத அளவுக்கு இருந்தது. அவர் பலவீனமான இலங்கைக்கு எதிராகத் தான் அதிகமாக விளையாடினார் என்று நீங்கள் சொல்லலாம். அப்படி பார்த்தால், விராட் கோலிக்கும் அது பொருந்தும். வீரராக ஆடினாலும் கேப்டனாக ஆடினாலும் தற்சமயம் குறைந்த ஓவர் போட்டிகளில் தான் சிறந்தவர் என்பதை ரோகித் சர்மா நிரூபித்து இருக்கிறார்.

சிறிய ஓய்வுக்கு பிறகு களம் திரும்ப உள்ள விராட் கோலி தென்ஆப்பிரிக்க மண்ணில் நிறைய ரன்கள் குவிப்பார் என்று உறுதியாக நம்புகிறேன்.

இவ்வாறு சந்தீப் பட்டீல் கூறினார்.தொடர்புடைய செய்திகள்

1. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது? - கவுதம் கம்பீர் பதில்
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது என்ற கேள்விக்கு இந்திய மூத்த வீரர் கம்பீர் பதில் அளித்தார்.
2. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: மும்பை, டெல்லி அணிகள் அரைஇறுதிக்கு முன்னேற்றம் கம்பீர் சதம் அடித்தார்
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் மும்பை, டெல்லி அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறியது. மூத்த வீரர் கம்பீர் சதம் விளாசினார்.
3. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: மும்பை–பீகார் அணிகள் கால்இறுதியில் இன்று மோதல்
விஜய்ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
4. பேட் செய்யாமலேயே இரண்டு ‘டிக்ளேர்’ நியூசிலாந்து உள்ளூர் கிரிக்கெட்டில் ருசிகரம்
நியூசிலாந்தில் நடந்த உள்ளூர் முதல் தர கிரிக்கெட் போட்டி ஒன்றில் சென்டிரல் டிஸ்ட்ரிக்ஸ்–கேன்டர்பரி அணிகள் மோதின.
5. ஜிம்பாப்வேக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணி மீண்டும் வெற்றி
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.