கிரிக்கெட்

அஸ்வினுக்கு, ரஹானே வேண்டுகோள் + "||" + Ashwin in Rahane request

அஸ்வினுக்கு, ரஹானே வேண்டுகோள்

அஸ்வினுக்கு, ரஹானே வேண்டுகோள்
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரஹானே, தொலைக்காட்சிக்கு அளித்த ஒரு பேட்டி.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரஹானே, தொலைக்காட்சிக்கு அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வினும், ரவீந்திர ஜடேஜாவும் தற்போது நன்றாக பந்து வீசி வருகிறார்கள். வெளிநாட்டிலும் சாதிக்கக்கூடிய திறமை அவர்களிடம் உண்டு. ஆனால் தென்ஆப்பிரிக்க மண்ணில் பந்து வீசும் போது தங்களது பந்துவீச்சு முறையை கொஞ்சம் மாற்றிக்கொள்ள வேண்டும். பவுலிங் செய்யும் வேகத்திலும் வித்தியாசத்தை காட்ட வேண்டும். ஆனாலும் இருவரில் யார் களம் கண்டாலும், ஏன் இருவரும் ஆடினாலும் வெளிநாட்டிலும் அசத்துவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்’ என்றார். மொயீன் அலி, நாதன் லயன் போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் விளையாடும் போது வித்தியாசமான ஸ்டைலில் பந்துவீசுவதை ரஹானே சுட்டிக்காட்டினார்.