கிரிக்கெட்

நியூசிலாந்து அணி எளிதில் வெற்றி + "||" + Against West Indies 20 Over cricket New Zealand team win easily

நியூசிலாந்து அணி எளிதில் வெற்றி

நியூசிலாந்து அணி எளிதில் வெற்றி
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் நியூசிலாந்து அணி எளிதில் வெற்றி பெற்றுள்ளனர்.
நெல்சன்,

நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்சனில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுக்கு 187 ரன்கள் குவித்தது. காலின் முன்ரோ (53 ரன், 37 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), விக்கெட் கீப்பர் கிளைன் பிலிப்ஸ் (55 ரன், 40 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) அரைசதம் விளாசினர். தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 19 ஓவர்களில் 140 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆந்த்ரே பிளட்சர் 27 ரன்கள் எடுத்தார். ‘அதிரடி மன்னன்’ கிறிஸ் கெய்ல் 12 ரன்னில் கேட்ச் ஆகி ஏமாற்றம் அளித்தார். நியூசிலாந்து தரப்பில் புதுமுக வேகப்பந்து வீச்சாளர் சேத் ரான்ஸ், பொறுப்பு கேப்டன் டிம் சவுதி தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அரைசதம் அடித்ததுடன், 3 கேட்ச் மற்றும் ஒரு ஸ்டம்பிங் செய்த விக்கெட் கீப்பர் கிளைன் பிலிப்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது 20 ஓவர் போட்டி நாளை மறுதினம் நடக்கிறது.