கிரிக்கெட்

இந்திய கேப்டன் கோலி பேட்டி + "||" + Indian captain kholi interview

இந்திய கேப்டன் கோலி பேட்டி

இந்திய கேப்டன் கோலி பேட்டி
“தென்ஆப்பிரிக்க மண்ணில் வெற்றி பெற முடியும்” இந்திய கேப்டன் கோலி பேட்டி.
கேப்டவுன்,

தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 5-ந்தேதி கேப்டவுனில் தொடங்குகிறது. அங்கு நேற்று நிருபர்களை சந்தித்த இந்திய கேப்டன் விராட் கோலி, ‘2010-11-ம் ஆண்டில் டெஸ்ட் தொடரை சமன் செய்தது தான் தென்ஆப்பிரிக்க மண்ணில் இந்தியாவின் சிறந்த செயல்பாடாகும். அது போன்று பந்துவீச்சு தாக்குதலை தொடுக்கக்கூடிய வீரர்கள் நம்மிடம் இப்போது இருக்கிறார்கள். சரியான கலவையில் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.


எனவே நிச்சயம் இங்கு எங்களால் வெற்றி பெற முடியும். வீரர்களின் திறமை மீது நம்பிக்கை இருக்கிறது. கடந்த காலங்களில் இங்கு என்ன நடந்தது என்பது பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கவில்லை. சிறந்த கிரிக்கெட்டை விளையாட இது அருமையான சந்தர்ப்பமாகும். போட்டியின் போது ஒவ்வொரு பகுதியிலும் ஆதிக்கம் செலுத்துவதற்குரிய வியூகங்களை தீட்டுவதில் கவனம் செலுத்துகிறோம்’ என்றார்.