டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் குக் முன்னேற்றம்


டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் குக் முன்னேற்றம்
x
தினத்தந்தி 31 Dec 2017 9:45 PM GMT (Updated: 31 Dec 2017 8:28 PM GMT)

டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் குக் முன்னேற்றம்

துபாய்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித், கூடுதல் புள்ளிகளுடன் தனது ‘நம்பர் ஒன்’ இடத்தை மேலும் வலுப்படுத்திக் கொண்டார்.

மெல்போர்னில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 4-வது டெஸ்டில் 76, 102 ரன்கள் வீதம் விளாசி தங்கள் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றிய சுமித் 2 புள்ளி கூடுதலாக பெற்று மொத்தம் 947 புள்ளிகளுடன் இருக்கிறார். ஐ.சி.சி. வரலாற்றில் அதிக புள்ளிகள் குவித்தவரான கிரிக்கெட்டின் சகாப்தம் டான்பிராட்மேனை (961 புள்ளி) முந்துவதற்கு சுமித்துக்கு இன்னும் 14 புள்ளிகளே தேவைப்படுகிறது.

இந்திய வீரர்களில் கேப்டன் விராட் கோலி 2-வது இடத்திலும் (893 புள்ளி), புஜாரா 3-வது இடத்திலும் (873 புள்ளி) நீடிக்கிறார்கள். மெல்போர்ன் டெஸ்டில் 244 ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் அலஸ்டயர் குக் 9 இடங்கள் எகிறி 8-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் முதல் 9 இடங்களில் மாற்றம் இல்லை. இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதலிடத்திலும், தென்ஆப்பிரிக்காவின் காஜிசோ ரபடா 2-வது இடத்திலும், இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா 3-வது இடத்திலும் தொடருகிறார்கள். 2017-ம் ஆண்டின் தொடக்கத்தில் ‘நம்பர் ஒன்’ ஆக வலம் வந்த மற்றொரு இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், இப்போது 4-வது இடத்துக்கு சரிந்திருப்பது கவனிக்கத்தக்கது.

Next Story