ராஞ்சி டிராபி கிரிக்கெட்: 9 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி பட்டம் வென்றது விதர்பா அணி


ராஞ்சி டிராபி கிரிக்கெட்: 9 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி பட்டம் வென்றது  விதர்பா அணி
x
தினத்தந்தி 1 Jan 2018 1:33 PM GMT (Updated: 1 Jan 2018 1:32 PM GMT)

ராஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை விதர்பா அணி வீழ்த்தியுள்ளது. #RanjiTrophy

இந்தூர், 

டெல்லி - விதர்பா அணிகள் இடையிலான ரஞ்சி கிரிக்கெட் இறுதிப்போட்டி இந்தூரில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த டெல்லி அணி 295 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. வேகப்பந்து வீச்சாளர் குர்பானி, ‘ஹாட்ரிக்’ உள்பட 6 விக்கெட்டுகளை சாய்த்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய விதர்பா அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவில் விதர்பா அணி 7 விக்கெட்டுக்கு 528 ரன்கள் திரட்டியுள்ளது. 

இன்று ஆட்டம் துவங்கியதும் மேற்கொண்டு 19 ரன்களை திரட்டிய விதர்பா அணி 547 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.  இதன் மூலம், 252 ரன்கள் முன்னிலையை விதர்பா அணி பெற்றது. இதையடுத்து, களம் இறங்கிய டெல்லி அணி, மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தது.  76 ஓவர்கள் தாக்கு பிடித்த டெல்லி அணி 280 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

இதையடுத்து, 29 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் 2-வது இன்னிங்சை துவங்கிய விதர்பா அணி, ஒரு விக்கெட் இழந்த நிலையில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம், ராஞ்சி டிராபி தொடரில் முறையாக விதர்பா அணி வெற்றி பெற்று மகுடம் சூட்டியுள்ளது. 


Next Story