கிரிக்கெட்

ஒரு நாள் போட்டி அணி பென் ஸ்டோக்ஸ் அதிரடி நீக்கம் + "||" + The Ben Stokes Action Strike

ஒரு நாள் போட்டி அணி பென் ஸ்டோக்ஸ் அதிரடி நீக்கம்

ஒரு நாள் போட்டி அணி பென் ஸ்டோக்ஸ் அதிரடி நீக்கம்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்- ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், கடந்த செப்டம்பர் மாதம் இரவு விடுதியில் வாலிபரை தாக்கிய சர்ச்சையில் கைதாகி விடுதலை ஆனார்.
லண்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்- ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், கடந்த செப்டம்பர் மாதம் இரவு விடுதியில் வாலிபரை தாக்கிய சர்ச்சையில் கைதாகி விடுதலை ஆனார். அவர் மீது போலீஸ் விசாரணை நடந்து வருவதால் ஆஷஸ் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வருகிற 14-ந்தேதி தொடங்கும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இடம் பெற்றிருந்தார்.


இந்த நிலையில் இங்கிலாந்து ஒரு நாள் போட்டி அணியில் இருந்தும் பென் ஸ்டோக்ஸ் நீக்கப்பட்டு இருக்கிறார். இன்று ஆஸ்திரேலியாவுக்கு புறப்படும் இங்கிலாந்து அணியினருடன் ஸ்டோக்ஸ் செல்லமாட்டார் என்றும், அவருக்கு பதிலாக டேவிட் மலான் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. அவர் மீது போலீசார் எந்த மாதிரியான குற்றச்சாட்டை பதிவு செய்கிறார்கள் என்பதை பொறுத்தே ஸ்டோக்ஸ் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மேற்கொள்ளும். அதே சமயம் ஐ.பி.எல். கிரிக்கெட் ஏலத்தில் அவரது பெயரை பதிவு செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.