கிரிக்கெட்

புத்தாண்டு தினத்தன்று தானே சமைத்து நண்பர்களுக்கு விருந்து அளித்த சச்சின் தெண்டுல்கர் + "||" + sachin tendulkar cooking food for friend

புத்தாண்டு தினத்தன்று தானே சமைத்து நண்பர்களுக்கு விருந்து அளித்த சச்சின் தெண்டுல்கர்

புத்தாண்டு தினத்தன்று தானே சமைத்து நண்பர்களுக்கு விருந்து அளித்த சச்சின் தெண்டுல்கர்
புத்தாண்டு தினத்தன்று சச்சின் தெண்டுல்கர் தானே சமைத்து தனது நண்பர்களுக்கு விருந்து அளித்தார். #SachinTendulkar #NewYear2018 |
புதுடெல்லி

கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் புத்தாண்டு வாழ்த்துகளோடு வீடியோ ஒன்றை சமூக ஊடகங்களில் பதிவு செய்தார். சச்சின் சமைப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். புத்தாண்டில் தனது நண்பர்களுக்கு தனது கைகளால் சமைத்து விருந்தளித்தார்.

அந்த வீடியோவில், சச்சின் பார்பெக்யூவில் இறைச்சியை சமைக்கிறார். அதில் இருந்து வரும் புகையால் கண்ணீர் வருவதையும் பொருட்படுத்தாமல் சச்சின் சமைத்து தனது நண்பர்களுக்கு கொடுத்தார். வீடியோவுடன், 'அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். புத்தாண்டில் எனது நண்பர்களுக்கு சமைத்து கொடுப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அனைவரும் உணவை விரும்பி உண்டனர். இந்த ஆண்டு இனிமையாக அமைய வாழ்த்துக்கள். நலமுடன் இருக்க வாழ்த்துக்கள்' என செய்தியையும் சச்சின் தெரிவித்துள்ளார்.

சச்சின் வெளியிட்ட இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சச்சின் சென்ற ஆண்டு ராஜ்ய சபாவில் உரையாற்ற முடியாததால், தனது உரையை வீடியோவாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


#SachinTendulkar | #NewYear2018 | #NewYearEve | #SachinCooks | #Cricketnews | #vedio


தொடர்புடைய செய்திகள்

1. பெற்ற தாயை துடைப்பம் கொண்டு அடித்த சிறுவன்; வீடியோ வைரலானது
கர்நாடகாவில் பெற்ற தாயை துடைப்பம் கொண்டு அடித்த சிறுவன் போலீசார் முன்னிலையில் மன்னிப்பு கேட்டுள்ளான்.
2. உலகில் பெரிய நாக்கு: நாக்கை வைத்து நெற்றியை தொடும் நபர்
நேபாளத்தில் 35 வயது மதிக்கத்தக்க நபர் தன்னுடைய நாக்கை வைத்து நெற்றியை தொடும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
3. நடிகர் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தின் தமிழ் பாடல் வீடியோ இணையதளத்தில் வெளியீடு
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் தமிழ் பாடல் வீடியோ இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
4. ராணுவ உளவாளி என கூறி வாலிபரை சுட்டு கொல்லும் தீவிரவாதிகள்; அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ
ராணுவ உளவாளி என்று கூறி வாலிபரை தீவிரவாதிகள் சுட்டு கொல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
5. டிஜிட்டல் சாமியாரான நித்யானந்தா கிராபிக்ஸ் காட்சிகளுடன் வீடியோ
டிஜிட்டல் சாமியாரான நித்யானந்தா கிராபிக்ஸ் காட்சிகளுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.