10 சிக்சர்களுடன் 20 ஓவர் போட்டியில் 3-வது சதம் அடித்த கொலின் முன்ரோ


10 சிக்சர்களுடன்  20 ஓவர் போட்டியில் 3-வது சதம் அடித்த கொலின் முன்ரோ
x
தினத்தந்தி 3 Jan 2018 12:02 PM GMT (Updated: 3 Jan 2018 12:02 PM GMT)

10 சிக்சர்களுடன் மேற்கிந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து வீரர் கொலின் மன்றோ 20 ஓவர் போட்டியில் 3-வது சதம் அடித்தார். #Cricketnews # T20

மவுண்ட் மாங்கனூயில் புதனன்று நடைபெற்ற 3-வது, இறுதி 20 ஓவர்  போட்டியில் 243 ரன்கள் குவித்த நியூஸிலாந்து மேற்கு இந்தியா  124 ரன்களுக்குச் சுருட்டி மிகப்பெரிய வெற்றியை ஈட்டியது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரைக் கைப்பற்றியது.

முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்தது. மார்டின் குப்தில் 38 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 63 ரன்கள் விளாச மற்றொரு தொடக்க அதிரடி மன்னன் கொலின் முன்ரோ 53 பந்துகளில் 3 பவுண்டரிகள் 10 சிக்சர்களுடன் 104 ரன்கள் விளாசி ஸ்கோர் 224 ரன்களாக இருந்த போது ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து ஆடிய மேற்கு இந்தியா படுமோசமாக ஆடி 16.3 ஓவர்களில் 124 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வியடைந்தது. கொலின் முன்ரோ 20 ஓவர்  சர்வதேச போட்டியில் 3-வது சதம் அடித்த முதல் வீரரானார். முதல் 2 போட்டிகளில் அரைசதம் அடித்துள்ளார். கொலின் முன்ரோ  ஆட்ட நாயகன், தொடர் நாயகன்  விருதை பெற்றார்.

Next Story