கிரிக்கெட்

காயத்தில் இருந்து மீண்டார், தவான் ஜடேஜா முதலாவது டெஸ்டில் ஆடுவது சந்தேகம் + "||" + Recovered from the injury, Davan Jadeja is doubtful to be playing in the first Test

காயத்தில் இருந்து மீண்டார், தவான் ஜடேஜா முதலாவது டெஸ்டில் ஆடுவது சந்தேகம்

காயத்தில் இருந்து மீண்டார், தவான் ஜடேஜா முதலாவது டெஸ்டில் ஆடுவது சந்தேகம்
தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

கேப்டவுன்,

தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் கேப்டவுனில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி டென்1, சோனி டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

தென்ஆப்பிரிக்காவுக்கு புறப்படுவதற்கு முன்பாக இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானுக்கு இடது கணுக்காலில் லேசான காயம் ஏற்பட்டது. இதற்காக காலில் கட்டுப்போட்டிருந்தார். இதனால் முதலாவது டெஸ்டில் அவர் விளையாடுவாரா? என்ற சந்தேகம் நிலவியது.

இந்த நிலையில் ஷிகர் தவான் காயத்தில் இருந்து குணமடைந்து உடல்தகுதியை எட்டி விட்டதாகவும், முதலாவது டெஸ்டுக்கான அணித் தேர்வுக்கு அவர் தயாராக இருப்பதாகவும் இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா தொடக்க டெஸ்டில் ஆடுவது கேள்விக்குறியாகியிருக்கிறது. வைரஸ் தொற்று காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள ஜடேஜா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போதைய நிலைமையை பார்க்கும் போது இந்திய அணி மூன்று வேகப்பந்து வீச்சாளர், ஒரு சுழற்பந்து வீச்சாளர் (அஸ்வின்) ஆகியோருடன் கேப்டவுடன் டெஸ்டில் களம் காணும் என்று தெரிகிறது.