கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்காவின் சவாலை சமாளிக்க இந்தியா தயாராக இருக்கிறதா? முதலாவது டெஸ்டுக்கு பிறகே தெரியும் என்கிறார், பிலாண்டர் + "||" + To tackle the challenge of South Africa Is India Ready?

தென்ஆப்பிரிக்காவின் சவாலை சமாளிக்க இந்தியா தயாராக இருக்கிறதா? முதலாவது டெஸ்டுக்கு பிறகே தெரியும் என்கிறார், பிலாண்டர்

தென்ஆப்பிரிக்காவின் சவாலை சமாளிக்க இந்தியா தயாராக இருக்கிறதா? முதலாவது டெஸ்டுக்கு பிறகே தெரியும் என்கிறார், பிலாண்டர்
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வெரோன் பிலாண்டர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:–

கேப்டவுன்,

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வெரோன் பிலாண்டர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:–

இந்திய அணி சமீபகாலமாக அதிகமான போட்டிகளை உள்நாட்டில் தான் விளையாடி இருக்கிறது. எனவே தென்ஆப்பிரிக்க மண்ணில் அந்த அணி எந்த மாதிரி விளையாடப்போகிறது என்பதை பார்க்கவே சுவாரஸ்யமாக இருக்கும். இங்கு விளையாடுவது முற்றிலும் வித்தியாசமானது. எனவே இந்த தொடரில் எங்களை சமாளிப்பதற்கு இந்திய அணி எந்த அளவுக்கு தயாராகி இருக்கிறது என்பதை அறிவதற்கு முதலாவது டெஸ்ட் முடியும் வரை காத்திருக்க வேண்டும். ஓரளவு புற்கள் உள்ள ஆடுகளம், மேகமூட்டமான சீதோஷ்ண நிலை நிச்சயம் எங்களுக்கு சாதகமாக இருக்கும். இதனால் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் கூட களம் இறங்க வாய்ப்பு உள்ளது. ஆனால் கடந்த இரு ஆண்டுகளாக 3 வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் களம் கண்டு சாதித்து வருகிறோம். சூழலுக்கு தக்கபடி ஆடும் லெவன் அணி தேர்வு செய்யப்படும்.

இவ்வாறு பிலாண்டர் கூறினார்.

டெஸ்ட் தரவரிசையில் 124 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள இந்திய அணி தொடரை முழுமையாக இழந்தாலும் கூட ‘நம்பர் ஒன்’ இடத்துக்கு ஆபத்து இல்லை. அவ்வாறு நிகழ்ந்தால் இந்தியாவின் புள்ளி எண்ணிக்கை 118 ஆக குறையும். தென்ஆப்பிரிக்காவின் புள்ளி எண்ணிக்கை 111–ல் இருந்து 118 ஆக அதிகரிக்கும். இருப்பினும் நூலிழை வித்தியாசத்தில் இந்தியா முதலிடத்தில் தொடரும். இந்திய அணி தொடரை முழுமையாக வென்றால் புள்ளி எண்ணிக்கை 128 ஆக உயரும். தென்ஆப்பிரிக்கா 107 புள்ளிகளுக்கு சரிவடையும்.