கிரிக்கெட்

ஐபிஎல் அணிகளில் தக்கவைக்கப்படும் வீரர்கள் விவரம் + "||" + IPL 2018 player retention Here is all you need to know ahead of the event today

ஐபிஎல் அணிகளில் தக்கவைக்கப்படும் வீரர்கள் விவரம்

ஐபிஎல் அணிகளில் தக்கவைக்கப்படும் வீரர்கள் விவரம்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் தக்கவைக்கப்படும் வீரர்கள் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படுகிறது. #IPL
மும்பை

11ஆவது ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும், தாங்கள் தக்கவைக்க விரும்பும் வீரர்கள் பட்டியலை அளிக்க இன்று கடைசி நாளாகும். 2 ஆண்டுகள் தடைக்கு பிறகு மீண்டும் களம் காணும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மகேந்திர சிங் டோனி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரை தக்க வைக்க முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

கொல்கத்தா அணி  கிறிஸ் லின், ஆண்ட்ரே ரசல் ஆகியோரை தக்கவைக்கிறது.சன்ரைஸ் ஹைதராபாத் அணி டேவிட் வார்னர், ரஷீத் கான் ஆகியோரை தக்கவைத்து கொள்கிறது.டெல்லி டேர் டெவில் அணி ரிஷாப் பந்த், ஸ்ரீயாஸ் அய்யர் ஆகியோரை தக்கவைத்து கொள்கிறது.

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி, டிவில்லியர்ஸ் ஆகியோரையும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஸ்டீவ் ஸ்மித்தையும் தக்க வைக்கும் எனத் தெரிகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி, ரோகித் சர்மா, பாண்ட்யா, பும்ரா ஆகியோரை தக்க வைக்கும் எனவும் கூறப்படுகிறது.  கிங்ஸ் லெவன் பஞ்சாப் க்ளென் மாக்ஸ்வெல்லை தக்கவைக்கிறது.

ஒவ்வொரு அணியும் ஏலத்திற்கு முன்பாக நேரடியாக 3 வீரர்களையும், ஏலத்தின் போது 2 வீரர்களையும் தக்கவைக்கலாம். நேரடியாகத் தக்கவைக்கப்படும் வீரர்களுக்கான பட்டியல் இன்று மாலை வெளியிடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 11ஆவது ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் வரும் 27, 28ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. 6 பந்தில் 6 சிக்சர் அடித்து சாதனை நிகழ்த்திய கிரிக்கெட் வீரர்
ஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்ரத்துல்லா சசாய் 6 பந்தில் 6 சிக்சர் அடித்து சாதனை நிகழ்த்தினார்.
2. நீங்கள் சரியாக விளையாடவில்லை என்றால் அணியில் இருக்க முடியாது : டோனிக்கு காம்பீர் எச்சரிக்கை
டோனி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி தன் மீதான விமர்சனங்களை தோற்கடிப்பார் என்று நம்புவதாக கவுதம் கம்பீர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
3. ஐதராபாத் 2-வது டெஸ்ட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்கிறது
4. 20 ஓவர் கிரிக்கெட்டில் சீனாவுக்கு எதிராக 11 பந்துகளில் வெற்றி பெற்ற நேபாளம்
பல்வேறு போட்டிகளில் தங்கத்தை குவிக்கும் சீனா கிரிக்கெட்டில் மட்டும் மண்ணை கவ்வுகிறது. 11 பந்துகளில் பந்தாடியது நேபாளம்.
5. தமிழ்நாட்டு கடற்கரையின் புகைப்படமா? காயமடைந்த மேத்யூ ஹைடனை கிண்டல்டித்த ஜாண்டி ரோட்ஸ்
அலைச்சறுக்கின் போது படுகாயமடைந்த மேத்யூ ஹைடனின் புகைப்படத்தை பார்த்த முன்னாள் வீரர் ஜாண்டி ரோட்ஸ், அவரை மோசமான விதத்தில் கிண்டல் செய்துள்ளார்.