கிரிக்கெட்

வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தெண்டுல்கர் யோசனை + "||" + For fast bowlers The idea of Tendulkar

வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தெண்டுல்கர் யோசனை

வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தெண்டுல்கர் யோசனை
இந்திய கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் நேற்று அளித்த ஒரு பேட்டியில்

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘2010–11–ம் ஆண்டு கேப்டவுனில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் 2–வது இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இடக்கை வேகப்பந்து வீச்சாளர்களான ஜாகீர்கானும் (இந்தியா), சோட்சோப்பும் (தென்ஆப்பிரிக்கா) ஆடுகளத்தில் தொடர்ச்சியாக பந்து வீசி ஒரு வித கடினத்தன்மையை உருவாக்கினர். இதற்கு இஷாந்த் ‌ஷர்மா, ஸ்ரீசாந்த் பந்துவீச்சும் உதவிகரமாக இருந்தது. அதை பயன்படுத்தி ஹர்பஜன்சிங் விக்கெட்டுகளை வீழ்த்தினார். தற்போதைய தொடரில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு இங்குள்ள ஆடுகளத்தன்மை மிகவும் சவாலாக இருக்கும். ஆடுகளத்தில் கொஞ்சம் ஈரப்பதமும் இருக்கலாம். ஆனால் நமது வேகப்பந்து வீச்சாளர்கள் ஆடுகளத்தில் போதுமான அளவுக்கு கடினத்தன்மையை ஏற்படுத்தி, அவர் விக்கெட்டுகள் வீழ்த்த உதவ வேண்டும்.’ என்றார்.

இந்த முறை நாம் 3 வேகப்பந்து வீச்சாளருடன், 4–வது வேகப்பந்து வீச்சாளர் இடத்திற்கு ஆல்–ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவை பயன்படுத்த முடியும். பாண்ட்யா, மணிக்கு 138 முதல் 140 கிலோமீட்டர் வேகம் வரை பந்து வீசுவதுடன், 7–வது மற்றும் 8–வது வரிசையில் பேட்டிங்கிலும் தாக்கத்தை ஏற்படுத்த கூடியவர் என்றும் தெண்டுல்கர் குறிப்பிட்டார்.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 சதங்கள் அடித்துள்ள தெண்டுல்கர் அதில் 5 சதங்களை அவர்களது சொந்த இடத்தில் பதிவு செய்தது நினைவு கூரத்தக்கது.