கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: தக்க வைக்கப்பட்ட வீரர்கள் யார்–யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு + "||" + The teams. Cricket: Who are the retained players? Official Announcement

ஐ.பி.எல். கிரிக்கெட்: தக்க வைக்கப்பட்ட வீரர்கள் யார்–யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு

ஐ.பி.எல். கிரிக்கெட்: தக்க வைக்கப்பட்ட வீரர்கள் யார்–யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு
11–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் வருகிற 27, 28–ந்தேதிகளில் பெங்களூருவில் நடைபெறுகிறது.

மும்பை,

11–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் வருகிற 27, 28–ந்தேதிகளில் பெங்களூருவில் நடைபெறுகிறது. இதையொட்டி ஒவ்வொரு அணிகளும் 5 வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. அதாவது 3 வீரர்களை நேரடியாகவும், 2 வீரர்களை ஏலத்தின் போது ‘மேட்ச் கார்டு’ சலுகையை பயன்படுத்தியும் வைத்துக் கொள்ள முடியும்.

தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை ஜனவரி 4–ந்தேதிக்குள் (நேற்று) சமர்பிக்க ஐ.பி.எல். நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி அந்த பட்டியல் வழங்கப்பட்டது. எந்தெந்த அணிகள் யார்–யாரை தொடர்ந்து நீட்டிக்க செய்திருக்கிறது என்ற விவரம் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது. ஆச்சரியம் அளிக்கும் வகையில் கொல்கத்தா அணி, தங்களது நீண்ட கால கேப்டன் கவுதம் கம்பீரை கழற்றி விட்டுள்ளது. இதே போல் பெங்களூரு அணிக்காக விளையாடி வந்த ‘சிக்சர் மன்னன்’ கிறிஸ் கெய்லும் ஏலத்திற்கு வருகிறார்.

ஏலத்தில், ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 80 கோடி ரூபாய் வரை செலவிட்டு வீரர்களை வாங்க முடியும். தக்கவைக்கப்படும் வீரர்களுக்குரிய ஊதிய தொகை இவற்றில் கழித்துக் கொள்ளப்படும். உதாரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டோனி, ரெய்னா, ஜடேஜா ஆகியோரை தக்க வைத்துக்கொண்டதன் மூலம் அவர்களுக்கு ரூ.33 கோடி ஒதுக்கப்பட்டது போக மீதமுள்ள ரூ.47 கோடியை வைத்து தான் எஞ்சிய வீரர்களை ஏலத்தில் எடுக்க முடியும்.

தக்கவைக்கப்பட்ட வீரர்கள் மற்றும் கையிருப்பு உள்ள தொகை விவரம் வருமாறு:–

மும்பை இந்தியன்ஸ்: ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, பும்ரா (எஞ்சிய தொகை ரூ.47 கோடி)

டெல்லி டேர்டெவில்ஸ்: கிறிஸ் மோரிஸ், ரிஷாப் பான்ட், ஸ்ரேயாஸ் அய்யர் ( ரூ.47 கோடி)

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்: விராட் கோலி, டிவில்லியர்ஸ், சர்ப்ராஸ் கான் (ரூ.49 கோடி)

சென்னை சூப்பர் கிங்ஸ்: டோனி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா (ரூ.47 கோடி)

ராஜஸ்தான் ராயல்ஸ்: ஸ்டீவன் சுமித் (ரூ.67½ கோடி)

கிங்ஸ் லெவன் பஞ்சாப்: அக்‌ஷர் பட்டேல் (ரூ.67½ கோடி)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: சுனில் நரின், ஆந்த்ரே ரஸ்செல் (ரூ.67½ கோடி

ஐதராபாத் சன்ரைசர்ஸ்: டேவிட் வார்னர், புவனேஷ்வர்குமார் (ரூ.67½ கோடி).