கிரிக்கெட்

குடும்பத்துடன் இணைவதைக்காட்டிலும் மிகப்பெரிய மகிழ்ச்சி எதுவும் இல்லை: சி.எஸ்.கே திரும்பிய சுரேஷ் ரெய்னா நெகிழ்ச்சி + "||" + There is no bigger joy then reuniting with your family, says suresh raina

குடும்பத்துடன் இணைவதைக்காட்டிலும் மிகப்பெரிய மகிழ்ச்சி எதுவும் இல்லை: சி.எஸ்.கே திரும்பிய சுரேஷ் ரெய்னா நெகிழ்ச்சி

குடும்பத்துடன் இணைவதைக்காட்டிலும் மிகப்பெரிய மகிழ்ச்சி எதுவும் இல்லை: சி.எஸ்.கே திரும்பிய சுரேஷ் ரெய்னா நெகிழ்ச்சி
குடும்பத்துடன் இணைவதைக்காட்டிலும் மிகப்பெரிய மகிழ்ச்சி எதுவும் இல்லை என சி.எஸ்.கே திரும்பிய சுரேஷ் ரெய்னா நெகிழ்ச்சிபட தெரிவித்துள்ளார். #IPLRetention #CSK
லக்னோ,

11–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் வருகிற 27, 28–ந்தேதிகளில் பெங்களூருவில் நடைபெறுகிறது. இதையொட்டி ஒவ்வொரு அணிகளும் 5 வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. அதாவது 3 வீரர்களை நேரடியாகவும், 2 வீரர்களை ஏலத்தின் போது ‘மேட்ச் கார்டு’ சலுகையை பயன்படுத்தியும் வைத்துக் கொள்ள முடியும்.

தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை ஜனவரி 4–ந்தேதிக்குள் (நேற்று) சமர்பிக்க ஐ.பி.எல். நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி அந்த பட்டியல் வழங்கப்பட்டது. எந்தெந்த அணிகள் யார்–யாரை தொடர்ந்து நீட்டிக்க செய்திருக்கிறது என்ற விவரம் அதிகாரபூர்வமாக நேற்று வெளியிடப்பட்டது. இதில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி தோனி, சுரேஷ் ரெய்னா, ஜடேஜா ஆகியோரை தக்க வைத்துக்கொண்டது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பியது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள சுரேஷ் ரெய்னா தனது டுவிட்டரில் இது குறித்து கூறியிருப்பதாவது:- “பழைய நினைவுகளுக்குத் திரும்புகிறேன்.உங்கள் குடும்பத்துடன் இணைவதைக் காட்டிலும் பெரிய மகிழ்ச்சி எதுவும் இருக்காது. எங்களை இணைப்பதற்கான சக்தி தடையற்றது” என்று பதிவிட்டுள்ளார். #Chennai | #IPLRetention | #CSK