கிரிக்கெட்

ஆ‌ஷஸ் கடைசி டெஸ்ட் இங்கிலாந்து அணி 346 ரன்கள் குவிப்பு + "||" + The last Test of Ashes England team 346 runs scored

ஆ‌ஷஸ் கடைசி டெஸ்ட் இங்கிலாந்து அணி 346 ரன்கள் குவிப்பு

ஆ‌ஷஸ் கடைசி டெஸ்ட் இங்கிலாந்து அணி 346 ரன்கள் குவிப்பு
ஆ‌ஷஸ் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 346 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது.

சிட்னி,

ஆ‌ஷஸ் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 346 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது.

இங்கிலாந்து அணி 346 ரன்கள்

இங்கிலாந்து–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5–வது மற்றும் கடைசி ஆ‌ஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்து இருந்தது. டேவிட் மலான் 55 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

நேற்று 2–வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. 112.3 ஓவர்களில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 346 ரன்கள் எடுத்து ‘ஆல்–அவுட்’ ஆனது. அதிகபட்சமாக கேப்டன் ஜோரூட் 83 ரன்னும், டேவிட் மலான் 62 ரன்னும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

6 ஆயிரம் ரன்களை கடந்து ஸ்டீவன் சுமித் சாதனை

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் பான்கிராப்ட் ரன் எதுவும் எடுக்காமலும், டேவிட் வார்னர் 56 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 67 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. உஸ்மான் கவாஜா 91 ரன்னுடனும் (204 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன்), கேப்டன் ஸ்டீவன் சுமித் 44 ரன்னுடனும் (88 பந்துகளில் 3 பவுண்டரியுடன்) களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்கள்.

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் 26 ரன்னை எட்டுகையில் டெஸ்ட் போட்டியில் 6 ஆயிரம் ரன்களை கடந்தார். தனது 111–வது இன்னிங்சில் ஸ்டீவன் சுமித் 6,000 ரன்கள் இலக்கை எட்டினார். இதன் மூலம் இந்த மைல் கல்லை வேகமாக எட்டிய 2–வது வீரர் என்ற சாதனையை கேரி சோபர்ஸ்சுடன் (வெஸ்ட்இண்டீஸ்) பகிர்ந்து கொண்டார். இந்த வகையில் ஆஸ்திரேலியா ஜாம்பவான் பிராட்மேன் 68 இன்னிங்சில் 6 ஆயிரம் ரன்களை கடந்ததே சாதனையாக உள்ளது. இன்று (சனிக்கிழமை) 3–வது நாள் ஆட்டம் நடக்கிறது.