கிரிக்கெட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ஹஸ்சி நியமனம் + "||" + Chennai Super Kings team Hassi appointed as a batting coach

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ஹஸ்சி நியமனம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ஹஸ்சி நியமனம்
இரண்டு ஆண்டு தடைக்கு பிறகு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மறுபிரவேசம் செய்ய இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டோனி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரை தக்கவைத்துக் கொண்டது.

சென்னை,

இரண்டு ஆண்டு தடைக்கு பிறகு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மறுபிரவேசம் செய்ய இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டோனி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரை தக்கவைத்துக் கொண்டது. ஏனைய வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட இருக்கும் நிலையில், அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹஸ்சி நியமிக்கப்பட்டுள்ளார். 42 வயதான மைக் ஹஸ்சி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 64 ஆட்டங்களில் விளையாடி 2,213 ரன்கள் எடுத்தவர் ஆவார்.

ஹஸ்சி கூறுகையில், ‘ஒரு வீரராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எனக்கு மறக்க முடியாத நினைவுகள் உண்டு. அது மட்டுமின்றி சென்னையில் இப்போது நிறைய நண்பர்களும் இருக்கிறார்கள். மறுபடியும் சென்னை அணியுடன் இணைந்து பணியாற்ற இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல்: டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சு தோ்வு
11வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 'டாஸ்' வென்ற சென்னை அணி பந்து வீச்சை தோ்வு செய்துள்ளது. #IPL2018
2. சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி அணியுடன் இன்று மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று இரவு நடக்கும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9-வது வெற்றி பெறும் முனைப்புடன் டெல்லி டேர் டெவில்சை சந்திக்கிறது.
3. ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சை தேர்வு செய்தது
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சை தேர்வு செய்தது. #CSKvSRH
4. மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிலையான தொடக்கம்
11வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிலையான தொடக்கத்தை வெளிப்படுத்தி வருகிறது. #IPL2018
5. சென்னை சூப்பர் கிங்ஸ் மந்தமான தொடக்கம்
11வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தோ்வு செய்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. #IPL2018 #CSK #SRH