ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து


ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து
x
தினத்தந்தி 6 Jan 2018 9:15 PM GMT (Updated: 6 Jan 2018 8:34 PM GMT)

நியூசிலாந்துக்கு சென்றுள்ள சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது.

வெலிங்டன்,

நியூசிலாந்துக்கு சென்றுள்ள சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. முதலாவது ஆட்டம் வெலிங்டனில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுக்கு 315 ரன்கள் குவித்தது. 10–வது சதத்தை எட்டிய கேப்டன் கனே வில்லியம்சன் 115 ரன்களும் (117 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்), காலின் முன்ரோ 58 ரன்களும், ஹென்றி நிகோல்ஸ் 50 ரன்களும் விளாசினர்.

அடுத்து ஆடிய பாகிஸ்தான் 30.1 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்திருந்த போது பலத்த மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்ததால் ‘டக்வொர்த்–லீவிஸ்’ விதிமுறை கடைபிடிக்கப்பட்டது. அந்த சமயத்தில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 228 ரன்கள் தேவையாக இருந்தது. இதனால் 61 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக பஹார் ஜமான் 82 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் டிம் சவுதி 3 விக்கெட்டுகளும், டிரென்ட் பவுலட் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். 2–வது ஒரு நாள் போட்டி நெல்சனில் நாளை மறுதினம் நடக்கிறது.


Next Story