கிரிக்கெட்

ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார், நிதினி + "||" + Zimbabwe team Bowling coach Stepped down, Nitini

ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார், நிதினி

ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார், நிதினி
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மகாயா நிதினி. இவர் 2016–ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து ஜிம்பாப்வே அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார்.

ஹராரே,

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மகாயா நிதினி. இவர் 2016–ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து ஜிம்பாப்வே அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் அந்த பொறுப்பில் இருந்து அவர் நேற்று திடீரென விலகினார். இது குறித்து அவர் கூறுகையில், ‘பொறுப்பில் இருந்து நானாக ராஜினாமா செய்யவில்லை. ஜிம்பாப்வே அணியினருக்கு எனது பயிற்சி முறையில் திருப்தி இல்லை. ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டதால் பதவியை துறந்தேன்’ என்றார்.