கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா + "||" + South Africa Defeat India

தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா

தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
ஜூனியர் உலக கோப்பை பயிற்சி கிரிக்கெட் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா.
கிறைஸ்ட்சர்ச்,

16 அணிகள் இடையிலான ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) வருகிற 13-ந்தேதி முதல் பிப்ரவரி 3-ந்தேதி வரை நியூசிலாந்தில் நடக்கிறது. இதையொட்டி தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகின்றன. கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த ஒரு ஆட்டத்தில் இந்திய அணி, தென்ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த இந்தியா 8 விக்கெட்டுக்கு 332 ரன்கள் குவித்தது. அர்யான் ஜூயல் (86 ரன்), ஹிமன்ஷூ ராணா (68 ரன்) அரைசதம் விளாசினர். கேப்டன் பிரித்வி ஷா (16 ரன்) ஏமாற்றம் அளித்தார். தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 38.3 ஓவர்களில் 143 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 189 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றது. இந்திய பவுலர்களில் இஷன் போரெல் 4 விக்கெட்டுகளும், நாகர்கோடி, ஷிவசிங், அபிஷேக் ஷர்மா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்திய அணி இன்றைய பயிற்சி ஆட்டத்தில் கென்யாவை எதிர்கொள்கிறது.