கிரிக்கெட்

ஹர்திக் பாண்ட்யா அற்புதமான ஆல்–ரவுண்டராக உருவெடுப்பார் குளுஸ்னர் சொல்கிறார் + "||" + Gulzner tells Hardikandya to come up with an amazing all-rounder

ஹர்திக் பாண்ட்யா அற்புதமான ஆல்–ரவுண்டராக உருவெடுப்பார் குளுஸ்னர் சொல்கிறார்

ஹர்திக் பாண்ட்யா அற்புதமான ஆல்–ரவுண்டராக உருவெடுப்பார் குளுஸ்னர் சொல்கிறார்
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்–ரவுண்டர் குளுஸ்னர் அளித்த ஒரு பேட்டியில், ‘முதல் இன்னிங்சில் cவின் ஆட்டம் அருமையாக இருந்தது.

கேப்டவுன்,

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்–ரவுண்டர் குளுஸ்னர் அளித்த ஒரு பேட்டியில், ‘முதல் இன்னிங்சில் ஹர்திக் பாண்ட்யாவின் (95 பந்துகளில் 93 ரன்கள்) ஆட்டம் அருமையாக இருந்தது. அவரது அபாரமான பேட்டிங்கால் இந்தியாவுக்கு இருந்த நெருக்கடி தென்ஆப்பிரிக்க அணியின் பக்கம் திரும்பியது. அவர் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறார். அவரது பந்து வீச்சு வேகம் இன்னும் அதிகரித்தால் உண்மையிலேயே அற்புதமான ஆல்–ரவுண்டராக உருவெடுப்பார்.

முதல் டெஸ்டில் குறைந்த ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி தோல்வியை சந்தித்தது அவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்து இருக்கும். அந்த போட்டியில் இருந்து இந்திய அணி நிறைய கற்று இருக்கும். உண்மையை சொல்லப்போனால் இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரை வெல்ல முடியாது என்பதே எனது கணிப்பாகும். 1–1 என்ற கணக்கில் தொடரை முடித்தால் அது இந்திய அணிக்கு நல்ல முடிவாகும். ஆனால் அதற்கு அவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.