கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி அறிவிப்பு + "||" + One Day Against South Africa: Women's Team Announcement

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி அறிவிப்பு

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி அறிவிப்பு
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

மும்பை,

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் அடுத்த மாதம் (பிப்ரவரி) சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் 3 ஒருநாள் மற்றும் 5 இருபது ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா–தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கிம்பெர்லியில் பிப்ரவரி 5–ந் தேதியும், 2–வது ஒருநாள் போட்டி 7–ந் தேதியும், 3–வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி போட்செப்ஸ்ட்ரூமில் 10–ந் தேதியும் நடக்கிறது.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய பெண்கள் அணியை, இந்திய கிரிக்கெட் வாரிய பெண்கள் தேர்வு குழுவினர் நேற்று தேர்வு செய்து அறிவித்துள்ளனர். 16 பேர் கொண்ட அணியின் கேப்டனாக மிதாலிராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணைகேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதுமுக வீராங்கனைகளாக ஜெமிமா ரோட்ரிக்ஸ், பூஜா வஸ்ட்ராகர், தானியா பாட்டியா ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

இந்திய அணி வீராங்கனைகள் விவரம் வருமாறு:–

மிதாலிராஜ் (கேப்டன்), ஹர்மன்பிரீத் கவுர் (துணை கேப்டன்), சுஷ்மா வர்மா (விக்கெட் கீப்பர்), எக்தா பிஸ்த், ஸ்மித்ரி மந்தனா, பூனம் யாதவ், பூனம் ரவுத், ராஜேஸ்வரி கெய்க்வாட், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஜூலன் கோஸ்வாமி, தீப்தி ‌ஷர்மா, ஷிகா பாண்டே, மோனா மேஷ்ரம், பூஜா வஸ்ட்ராகர், வேதா கிருஷ்ணமூர்த்தி, தானியா பாட்டியா (விக்கெட் கீப்பர்).

ஒருநாள் போட்டி தொடரை அடுத்து இரு அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடர் நடைபெறுகிறது. இந்த போட்டி தொடருக்கான இந்திய பெண்கள் அணி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த உலக கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது.தொடர்புடைய செய்திகள்

1. துளிகள்
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இலங்கையில் நடந்த ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.