கிரிக்கெட்

பேட்டிங் சராசரியில் டான் பிராட்மேனை முந்திய ஆப்கானிஸ்தான் வீரர் + "||" + Afghanistan batsman Baheer Shah averages more than Sir Don Bradman

பேட்டிங் சராசரியில் டான் பிராட்மேனை முந்திய ஆப்கானிஸ்தான் வீரர்

பேட்டிங் சராசரியில் டான் பிராட்மேனை முந்திய ஆப்கானிஸ்தான் வீரர்
ஆப்கானிஸ்தானை சேர்ந்த 19-வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரரான பகீர் ஷா, டான் பிராட்மேனின் பேட்டிங் சராசரி சாதனையை முறியடித்துள்ளார். #BaheerShah #DonBradman
ஆப்கானிஸ்தான் 19-வயதுக்குட்பட்ட அணியை சேர்ந்த பேட்ஸ்மேனான பகீர் ஷா சாதனை படைத்துள்ளார். பகீர் ஷா, 12 முதல்தர இன்னிங்சில் பேட்டிங் செய்து 1096 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 121.77 ஆகும். அவரது அறிமுக போட்டியில் பகீர் ஷா 256 ரன்கள் அடித்து அசத்தினார். இது அறிமுக போட்டியில் ஒரு வீரரின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராகும்.

இதன்மூலம், கிரிக்கெட் ஜாம்பவனான டான் பிராட்மேனின் சாதனையை பகீர் ஷா முறியடித்துள்ளார்.  டான் பிராட்மேன், 80 இன்னிங்சில் 29 சதங்களுடன் 6996 ரன்கள் குவித்துள்ளார. சராசரி 99.94 ஆகும். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுதான் மிகச் சிறந்த சராசரி ஆகும். 

#BaheerShah #battingaverage #DonBradman #cricketnews