கிரிக்கெட்

பார்வையற்றோருக்கான உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா + "||" + Blind Cricket World Cup: India thrash Pakistan by 7 wickets

பார்வையற்றோருக்கான உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

பார்வையற்றோருக்கான உலக கோப்பை கிரிக்கெட்:  பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா
இந்திய அணி பார்வையற்றோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

துபாய்,

நடப்பு சாம்பியனான இந்திய அணி அஜ்மன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் அணியுடன் இன்று விளையாடியது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது.  எனினும், 40 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை கைப்பற்றி 282 ரன்களில் பாகிஸ்தான் அணியை இந்தியா கட்டுப்படுத்தியது.

இந்திய தரப்பில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 34.5 ஓவர்களில் நிர்ணயிக்கப்பட்ட வெற்றி இலக்கு எட்டப்பட்டது.

இந்திய அணியின் அரியானா வீரர் தீபக் ஆட்டமிழக்காமல் 79 (71) ரன்கள் எடுத்துள்ளார்.  அவர் 8 பவுண்டரிகள் அடித்துள்ளார்.  ஆந்திர பிரதேசத்தின் வெங்கடேஷ் 64 (55) ரன்கள் எடுத்துள்ளார்.  அஜய் 47 (34) ரன்கள் எடுத்துள்ளார்.  இந்திய அணி நாளை நடைபெறும் போட்டியில் வங்காளதேசத்துடன் விளையாடுகிறது.தொடர்புடைய செய்திகள்

1. வாயை கொடுத்து வம்பில் மாட்டிக் கொண்ட உமர் அக்மல் - பாகிஸ்தான் வாரியம் நோட்டீஸ்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூதாட்ட முயற்சி நடந்ததாக வாயை கொடுத்து வம்பில் மாட்டிக் கொண்ட உமர் அக்மலுக்கு பாகிஸ்தான் வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.