கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா பொறுப்பான ஆட்டம் + "||" + Markram fifty keeps India at bay

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா பொறுப்பான ஆட்டம்

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா பொறுப்பான ஆட்டம்
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. #IndvsSA | #FreedomSeries
செஞ்சூரியன்,

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. கேப்டவுனில் நடந்த முதலாவது டெஸ்டில் 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்ஆப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் ஸ்டேடியத்தில் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டூபிளஸிஸ்  தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். இதன்படி இந்திய அணி முதலில் பந்து வீசி வருகிறது. கடந்த போட்டியில் மண்ணைக்கவ்விய இந்திய அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன. துவக்க வீரர் தவான் நீக்கப்பட்டு கேஎல் ராகுல் அணியில் சேர்க்கப்பட்டார். அதேபோல், விக்கெட் கீப்பர் சகா நீக்கப்பட்டு பார்த்தீவ் படேலும், புவனேஷ்குமாருக்கு பதிலாக இஷாந்த் ஷர்மாவும் சேர்க்கப்பட்டு இருந்தனர். 

முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. துவக்க வீரர்களான டீன் எல்கர், ஏய்டன் மார்க்ரம் ஆகிய இருவரும் மிகவும் கவனமாக பந்தை எதிர்கொண்டனர். இதனால், விக்கெட் எதுவும் இழப்பின்றி எளிதாக தென் ஆப்பிரிக்க அணி 50 ரன்களை கடந்தது. தென் ஆப்பிரிக்க அணி  உணவு இடைவேளை வரை 27 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 78 ரன்கள் எடுத்து இருந்தது. மார்க்ரம் 51 ரன்களுடனும் எல்கர் 26 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 


விளையாடும் இரு அணி வீரர்களின்  பட்டியல் வருமாறு:-

இந்தியா: முரளிவிஜய், லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா,  பார்த்தீவ் பட்டேல், ஹர்திக் பாண்ட்யா, அஸ்வின், முகமது ஷமி, பும்ரா,  இஷாந்த் ஷர்மா.

தென்ஆப்பிரிக்கா: 

மார்க்ராம், டீன் எல்கர், அம்லா, டிவில்லியர்ஸ், பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), குயின்டான் டி காக், கேஷவ் மகராஜ், வெரோன் பிலாண்டர், ரபடா, மோர்னே மோர்கல், நிகிடி.  #IndvsSA | #FreedomSeries