கிரிக்கெட்

பாகிஸ்தான் 74 ரன்னில் சுருண்டு தோல்வி + "||" + Pakistan is 74 Failure

பாகிஸ்தான் 74 ரன்னில் சுருண்டு தோல்வி

பாகிஸ்தான் 74 ரன்னில் சுருண்டு தோல்வி
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: பாகிஸ்தான் 74 ரன்னில் சுருண்டு தோல்வி
டுனெடின்,

நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டுனெடினில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 257 ரன்கள் சேர்த்து ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக கேப்டன் கனே வில்லியம்சன் 73 ரன்னும், ராஸ் டெய்லர் 52 ரன்னும் எடுத்தனர். அடுத்து களம் கண்ட பாகிஸ்தான் அணி 27.2 ஓவர்களில் 74 ரன்னில் சுருண்டது. ஒரு நாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் 3-வது மோசமான ஸ்கோர் இதுவாகும்.

நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 183 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த நியூசிலாந்து அணி 5 ஆட்டங்கள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் தனதாக்கியது. 4-வது போட்டி ஹாமில்டனில் நாளை மறுநாள் நடக்கிறது.