பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்தது ஆப்கானிஸ்தான்


பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்தது ஆப்கானிஸ்தான்
x
தினத்தந்தி 13 Jan 2018 10:45 PM GMT (Updated: 13 Jan 2018 7:00 PM GMT)

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்தது ஆப்கானிஸ்தான்.

வாங்கரே,

12-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) நியூசிலாந்தில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. தொடக்க நாளில் ‘டி’ பிரிவு ஆட்டம் ஒன்றில் ஆப்கானிஸ்தான் அணி, முன்னாள் சாம்பியன் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 47.4 ஓவர்களில் 188 ரன்னில் ஆட்டம் இழந்தது. பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 47.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டார்விஷ் ரசோலி 76 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். இன்னொரு ஆட்டத்தில் நியூசிலாந்து அணி (ஏ பிரிவு) 8 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீசை எளிதில் தோற்கடித்தது. மற்ற ஆட்டங்களில் ஜிம்பாப்வே 10 விக்கெட் வித்தியாசத்தில் பப்புவா நியூ கினியாவையும் (பி பிரிவு), வங்காளதேசம் 87 ரன்கள் வித்தியாசத்திலும் நமிபியாவையும் (சி பிரிவு) துவம்சம் செய்தன.

இன்றைய லீக் ஆட்டங்களில் அயர்லாந்து-இலங்கை, கென்யா-தென்ஆப்பிரிக்கா (இரண்டு ஆட்டமும் அதிகாலை 3 மணி), ஆஸ்திரேலியா-இந்தியா (அதிகாலை 5.30 மணி) அணிகள் மல்லுகட்டுகின்றன.

Next Story