கிரிக்கெட்

நாங்கள் ஒன்றும் இயந்திரம் இல்லை வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா ஆவேசம் + "||" + Ready to take crucial wickets: Ishant Sharma

நாங்கள் ஒன்றும் இயந்திரம் இல்லை வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா ஆவேசம்

நாங்கள் ஒன்றும் இயந்திரம் இல்லை வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா ஆவேசம்
பந்துவீச்சாளர்களும் மனிதர்கள்தான். நாங்கள் ஒன்றும் இயந்திரம் இல்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா கூறினார்.#INDvsSA
செஞ்சுரியன்

தென்னாப்பிரிக்காவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் களமிறங்கியுள்ள இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அவர் கூறும்போது, முதல் டெஸ்ட் போட்டியிலேயே நான் விளையாடி இருக்க வேண்டும். காய்ச்சல் காரணமாக ஆடவில்லை. குணமான பின் இரண்டாவது போட்டியில் களமிறங்கினேன். அணியின் மூத்த பந்துவீச்சாளர் நான்தான். முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்திய வேண்டிய பொறுப்பு எனக்கிருக்கிறது. பவுன்ஸ்தான் என் பலம். அதை எப்படி சரியாகப் பயன்படுத்தி விக்கெட் எடுக்க வேண்டும் என்றுதான் பார்க்கிறேன். என்னுடன் பந்துவீசும் மற்ற பந்துவீச்சாளர்களைக் குறை சொல்கிறார்கள். அது தவறு. பந்துவீச்சாளர்களும் மனிதர்கள்தான். களத்தில் இறங்கிய உடனேயே விக்கெட்டுகளை வீழ்த்தி விட, நாங்கள் ஒன்றும் மெஷின் இல்லை.

பேட்ஸ்மேன்களின் பலவீனமான ஏரியா எது என்பதறிந்து அந்த பகுதியில் பந்துவீசி விக்கெட் வீழ்த்துவது, அதிக ரன்களை விட்டுக்கொடுக்காமல் பீல்டிங்கை ஒழுங்குபடுத்துவது பற்றிதான் யோசித்து விளையாடுகிறோம். பீல்டிங் மோசமாக இருந்ததாகவும் சில கேட்ச்-களை விட்டுவிட்டதாகவும் புகார் சொல்கிறார்கள். விளையாட்டில் இது சகஜம். அவர்கள் சில சிறந்த கேட்ச்களை பிடித்திருக்கிறார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. அதனால் அதைக் கண்டு பயப்பட வேண்டாம் என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. 42.1 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் இலக்கை தகர்த்து இந்தியா அபார வெற்றி
முதலாவது ஒருநாள் போட்டியில் 42.1 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் இலக்கை தகர்த்து இந்தியா அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
2. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி, ரோகித் ஷர்மா சதம் கடந்து அபாரம்
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அதிரடி காட்டி வருகிறது.
3. சர்வதேச கிரிக்கெட்டில் பெரும்பாலான புக்கிகள் இந்தியர்களாக உள்ளனர் - ஊழல் பிரிவு பொது மேலாளர்
சர்வதேச கிரிக்கெட்டில் பெரும்பாலான புக்கிகள் இந்தியர்களாக உள்ளனர் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பொது ஊழல் பிரிவு பொது மேலாளர் அலெக்ஸ் மார்சல் கூறி உள்ளார்.
4. ’பொய்களுடன் நீண்ட நாள் வாழ முடியாது’சூதாட்டப் புகாரை ஒப்புகொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்
தன்மீது சுமத்தப்பட்ட சூதாட்டப் புகாரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் டேனிஷ் கனேரியா ஒப்புக்கொண்டுள்ளார்.
5. தொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி ; இன்னும் முடிவு எடுக்கவில்லை - பிசிசிஐ
தொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி இன்னும் முடிவு எடுக்கவில்லை என பிசிசிஐ தெரிவித்து உள்ளது.