கிரிக்கெட்

இந்திய அணி 307 ரன்னில் ‘ஆல்-அவுட்’விராட்கோலி சதம் அடித்தார் + "||" + India 307 runs All out Virat Kohli scored a hundred

இந்திய அணி 307 ரன்னில் ‘ஆல்-அவுட்’விராட்கோலி சதம் அடித்தார்

இந்திய அணி 307 ரன்னில் ‘ஆல்-அவுட்’விராட்கோலி சதம் அடித்தார்
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 307 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. விராட்கோலி சதம் அடித்தார்.
செஞ்சூரியன்,

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. கேப்டவுனில் நடந்த முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.


இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நடந்து வருகிறது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 6-வது விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்து இருந்தது. பிளிஸ்சிஸ் 24 ரன்னுடனும், கேஷவ் மகராஜ் 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

2-வது நாளான நேற்று முன்தினம் தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்க அணி மதிய உணவு இடைவேளைக்கு முன்பு 113.5 ஓவர்களில் 335 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் மார்க்ராம் 94 ரன்னும், ஹசிம் அம்லா 82 ரன்னும், கேப்டன் டுபிளிஸ்சிஸ் 63 ரன்னும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்டும், முகமது ஷமி ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் 61 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்து இருந்தது. லோகேஷ் ராகுல் 10 ரன்னிலும், புஜாரா ரன் எதுவும் எடுக்காமலும், தொடக்க ஆட்டக்காரர் எம்.விஜய் 46 ரன்னிலும், ரோகித் சர்மா 10 ரன்னிலும், பார்த்தீவ் பட்டேல் 19 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். கேப்டன் விராட்கோலி 85 ரன்னுடனும், ஹர்திக் பாண்ட்யா 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. விராட்கோலி, ஹர்திக் பாண்ட்யா தொடர்ந்து ஆடினார்கள். தனது அபாரமான ஆட்டத்தை தொடர்ந்த விராட்கோலி சதம் அடித்தார். அவர் 146 பந்துகளில் 10 பவுண்டரியுடன் தனது 21-வது சதத்தை எட்டினார்.

அணியின் ஸ்கோர் 209 ரன்னாக இருந்த போது நிலைத்து நின்று ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா (15 ரன்) பிலாண்டரால் ரன்-அவுட் செய்யப்பட்டு வெளியேறினார். 7-வது விக்கெட்டுக்கு அஸ்வின், விராட்கோலியுடன் கைகோர்த்தார். அஸ்வின், விராட்கோலியின் ரன் குவிப்புக்குபக்கபலமாக இருந்ததுடன் அடித்து ஆடி ரன்னும் சேர்த்தார். ஸ்கோர் 280 ரன்னாக உயர்ந்த போது அஸ்வின் (54 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 38 ரன்கள்) பிலாண்டர் பந்து வீச்சில் டுபிளிஸ்சிஸ்சிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். 7-வது விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 71 ரன்கள் சேர்த்தனர்.

அதன் பின்னர் வந்த முகமது ஷமி 1 ரன்னிலும், இஷாந்த் ஷர்மா 3 ரன்னிலும் அவுட் ஆனார்கள். நிலைத்து நின்று ஆடிய விராட்கோலி (153 ரன்கள், 217 பந்துகளில் 15 பவுண்டரியுடன்) கடைசி விக்கெட்டாக ஆட்டம் வீழ்ந்தார்.

மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இந்திய அணி முதல் இன்னிங்சில் 92.1 ஓவர்களில் 307 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. பும்ரா ரன் கணக்கை தொடங்காமல் களத்தில் நின்றார். தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் மோர்னே மோர்கல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

28 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. 3 ரன்களுக்குள் அந்த அணி 2 விக்கெட்டை இழந்தது. மார்க்ராம் (1 ரன்), ஹசிம் அம்லா (1 ரன்) விக்கெட்டை ஜஸ்பிரித் பும்ரா எல்.பி.டபிள்யூ. முறையில் சாய்த்தார்.

தேனீர் இடைவேளைக்கு பிறகு தென்ஆப்பிரிக்க அணி 23.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டு சிறிது நேரம் கழித்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது.

வெளிச்சம் இல்லாமையால் நிறுத்தம்

தென் ஆப்பிரிக்க அணி 29 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்து இருந்த போது போதிய வெளிச்சம் இல்லாததால் நேற்றைய ஆட்டம் அத்துடன் முடித்து கொள்ளப்பட்டது. அப்போது டீன் எல்கர் 36 ரன்னுடனும், டிவில்லியர்ஸ் 50 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது. தென் ஆப்பிரிக்க அணி 118 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அந்த அணிக்கு கைவசம் 8 விக்கெட்டுகள் உள்ளது.

ஸ்கோர் போர்டுமுதல் இன்னிங்ஸ்

தென்ஆப்பிரிக்கா

டீன் எல்கர் (சி) விஜய் (பி)

அஸ்வின் 31

மார்க்ராம் (சி) பட்டேல் (பி)

அஸ்வின் 94

அம்லா (ரன்-அவுட்) 82

டிவில்லியர்ஸ்(பி)இஷாந்த் ஷர்மா 20

டுபிளிஸ்சிஸ் (பி) இஷாந்த் ஷர்மா 63

குயின்டான் டி காக் (சி) கோலி

(பி) அஸ்வின் 0

பிலாண்டர் (ரன்-அவுட்) 0

மகராஜ் (சி) பட்டேல் (பி)

முகமது ஷமி 18

ரபடா (சி) ஹர்திக் பாண்ட்யா

(பி) இஷாந்த் ஷர்மா 11

மோர்னே மோர்கல் (சி) விஜய்

(பி) அஸ்வின் 6

நிகிடி (நாட்-அவுட்) 1

எக்ஸ்டிரா 9

மொத்தம் (113.5 ஓவர்களில்

ஆல்-அவுட்) 335

விக்கெட் வீழ்ச்சி: 1-85, 2-148, 3-199, 4-246, 5-250, 6-251, 7-282, 8-324, 9-333.

பந்து வீச்சு விவரம்:

பும்ரா 22-6-60-0

முகமது ஷமி 15-2-58-1

இஷாந்த் ஷர்மா 22-4-46-3

ஹர்திக் பாண்ட்யா 16-4-50-0

அஸ்வின் 38.5-10-113-4

இந்தியா

எம்.விஜய் (சி) டி காக் (பி)

மகராஜ் 46

லோகேஷ் ராகுல் (சி) அண்ட்

(பி) மோர்னே மோர்கல் 10

புஜாரா (ரன்-அவுட்) 0

விராட்கோலி (சி) டிவில்லியர்ஸ்

(பி) மோர்னே மோர்கல் 153

ரோகித் சர்மா எல்.பி.டபிள்யூ.

(பி) ரபடா 10

பார்த்தீவ் பட்டேல் (சி) டி காக்

(பி) நிகிடி 19

ஹர்திக் பாண்ட்யா(ரன்-அவுட்) 15

அஸ்வின் (சி) பிளிஸ்சிஸ்

(பி) பிலாண்டர் 38

முகமது ஷமி (சி) அம்லா

(பி) மோர்னே மோர்கல் 1

இஷாந்த் ஷர்மா (சி) மார்க்ராம்

(பி) மோர்னே மோர்கல் 3

பும்ரா (நாட்-அவுட்) 0

எக்ஸ்டிரா 12

மொத்தம் (92.1 ஓவர்களில்

ஆல்-அவுட்) 307

விக்கெட் வீழ்ச்சி: 1-28, 2-28, 3-107, 4-132, 5-164, 6-209, 7-280, 8-281, 9-306.

பந்து வீச்சு விவரம்:

மகராஜ் 20-1-67-1

மோர்னே மோர்கல் 22.1-5-60-4

பிலாண்டர் 16-3-46-1

ரபடா 20-1-74-1

நிகிடி 14-2-51-1

2-வது இன்னிங்ஸ் தென்ஆப்பிரிக்கா:

மார்க்ராம் எல்.பி.டபிள்யூ. (பி)

பும்ரா 1

டீன் எல்கர் (நாட்-அவுட்) 36

ஹசிம் அம்லா எல்.பி.டபிள்யூ.

(பி) பும்ரா 1

டிவில்லியர்ஸ் (நாட்-அவுட்) 50

எக்ஸ்டிரா 2

மொத்தம் (29 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு) 90

விக்கெட் வீழ்ச்சி: 1-1, 2-3.

பந்து வீச்சு விவரம்:

அஸ்வின் 12-0-33-0

பும்ரா 8-2-30-2

இஷாந்த் ஷர்மா 4-0-14-0

முகமது ஷமி 5-1-12-0

செஞ்சூரியனில் முதல் சதம் அடித்து விராட்கோலி சாதனை

செஞ்சூரியன் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் வெளிநாட்டு கேப்டன் என்ற பெருமையை விராட்கோலி (153 ரன்கள்) தனதாக்கினார். இதற்கு முன்பு 2010-ம் ஆண்டில் இங்கு டோனி 90 ரன்கள் எடுத்ததே வெளிநாட்டு கேப்டனின் அதிகபட்ச ரன்னாக இருந்தது. அத்துடன் தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த 2-வது இந்திய கேப்டன் என்ற பெருமையையும் விராட்கோலி பெற்றார். 1997-ம் ஆண்டில் கேப்டவுனில் நடந்த டெஸ்டில் இந்திய அணி கேப்டன் தெண்டுல்கர் சதம் கண்டு இருந்தார். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் விராட்கோலி 10 சதங்கள் விளாசி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.