கிரிக்கெட்

நடுவரிடம் விதிமீறலில் ஈடுபட்டதாக இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு 25 சதவீதம் அபராதம் - ஐசிசி. + "||" + Virat Kohli has been fined for breaching the ICC Code of Conduct

நடுவரிடம் விதிமீறலில் ஈடுபட்டதாக இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு 25 சதவீதம் அபராதம் - ஐசிசி.

நடுவரிடம் விதிமீறலில் ஈடுபட்டதாக இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு  25 சதவீதம்  அபராதம் - ஐசிசி.
தென்னாப்பிரிக்காவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய கேப்டன் விராட் கோலி, நேற்று கள நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.#ICC #ViratKohli
செஞ்சுரியனில் நடைபெறும் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 335 ரன்கள் எடுத்தது. மூன்றாவது நாளான நேற்று இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் 307 ரன்களில் முடிவுக்கு வந்தது. சிறப்பாக விளையாடி சதம் விளாசிய கேப்டன் விராட் கோலி 153 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 2 விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் தடைபட்டது. பின்னர் ஆட்டம் தொடங்கியதும் போதிய வெளிச்சம் இல்லாததால் போட்டி நிறுத்தப்பட்டது. 

மழைக்குப் பின் ஆட்டம் தொடங்கியபோது, விராத் கோலி நடுவர்களிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மைதானம் ஈரமாக இருந்ததால் பந்து ஸ்விங் ஆகவில்லை. பந்து ஈரமாகவும் இருந்ததால் இதுபற்றி புகார் சொன்னார். அவர்கள் அதற்கு சரியான பதில் சொல்லாததால் இந்த விவகாரத்தை போட்டி நடுவர் கிறிஸ் பிராடிடம் கொண்டு செல்ல சென்றார். அம்பயர்களுடன் நீண்ட நேரம் விவாதித்தும் பலனில்லாததால் விராத் கோலி கோபமடைந்தார். இந்த தகவலை பின்னர் செய்தியாளர்களிடம் பும்ரா தெரிவித்தார்.

இந்த நிலையில் நடுவரிடம் விதிமீறலில் ஈடுபட்டதாக இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு   ஊதியத்தில் 25 சதவீதம்  அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக ஐசிசி  தெரிவித்து உள்ளது.


#ICC #ViratKohli  #SAvIND   #FreedomSeries