நடுவரிடம் தகராறு விராட்கோலிக்கு அபராதம்


நடுவரிடம் தகராறு விராட்கோலிக்கு அபராதம்
x
தினத்தந்தி 16 Jan 2018 9:00 PM GMT (Updated: 16 Jan 2018 8:11 PM GMT)

தென்ஆப்பிரிக்கா-இந்தியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின் 3-வது நாளில்

செஞ்சூரியன்,

தென்ஆப்பிரிக்கா-இந்தியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின் 3-வது நாளில் தென் ஆப்பிரிக்க அணியின் 2-வது இன்னிங்சில் 25-வது ஓவரில் நடுவர் மிச்செல் கோக்கிடம், இந்திய அணி கேப்டன் விராட்கோலி வாக்குவாதம் செய்தார். அவுட் பீல்டு ஈரப்பதமாக இருப்பதால் பந்து சேதம் அடைந்து இருக்கிறது. எனவே பந்தை மாற்ற வேண்டும் என்று விராட்கோலி நடுவரிடம் முறையிட்டார். ஆனால் பந்தை மாற்ற நடுவர் மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த விராட்கோலி பந்தை மைதானத்தில் தூக்கி எறிந்தார். இந்த சம்பவம் குறித்து நடுவர்கள் அளித்த புகாரை விசாரித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விராட்கோலி நடுவரை அவமரியாதை செய்ததை உறுதி செய்தது. இதனை அடுத்து விராட்கோலிக்கு போட்டி கட்டணத்தில் 25 சதவீதத்தை அபராதமாக விதித்தது. அத்துடன் அவருக்கு ஒரு தகுதி இழப்பு புள்ளியும் விதிக்கப்பட்டது.

Next Story