கிரிக்கெட்

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்:இங்கிலாந்து அணி 2-வது வெற்றி + "||" + Junior World Cup Cricket: England team 2nd win

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்:இங்கிலாந்து அணி 2-வது வெற்றி

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்:இங்கிலாந்து அணி 2-வது வெற்றி
16 அணிகள் இடையிலான ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) நியூசிலாந்தில் நடந்து வருகிறது.
லிங்கான்,

16 அணிகள் இடையிலான ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) நியூசிலாந்தில் நடந்து வருகிறது. ‘சி’ பிரிவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி 2-வது வெற்றி பெற்றது. இதில் வங்காளதேசம் நிர்ணயித்த 176 ரன்கள் இலக்கை இங்கிலாந்து அணி கேப்டன் ஹாரி புரூக் (102 ரன்) சதத்தின் உதவியுடன் 29.3 ஓவர்களில் எட்டியது. இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் கனடா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நமிபியாவை வென்றது. ஏறக்குறைய கால்இறுதியை உறுதி செய்து விட்ட இங்கிலாந்து அணி தனது கடைசி லீக்கில் கனடாவை நாளை எதிர்கொள்கிறது.


‘பி’ பிரிவில் 2 வெற்றிகளுடன் ஏற்கனவே கால்இறுதிக்கு தகுதி பெற்று விட்ட இந்திய அணி இன்று தனது கடைசி லீக்கில் ஜிம்பாப்வேயுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.