கிரிக்கெட்

20 ஓவர் கிரிக்கெட்: தமிழக அணியை வென்றது டெல்லி + "||" + 20 Over cricket: delhi won Tamilnadu New Delhi

20 ஓவர் கிரிக்கெட்: தமிழக அணியை வென்றது டெல்லி

20 ஓவர் கிரிக்கெட்:
தமிழக அணியை வென்றது டெல்லி
சயத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட்டில் சூப்பர் லீக்கில் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் தமிழக அணி, நேற்று டெல்லி அணியை சந்தித்தது.
கொல்கத்தா,

சயத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட்டில் சூப்பர் லீக்கில் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் தமிழக அணி, நேற்று டெல்லி அணியை சந்தித்தது. கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தமிழகம் 7 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் விஜய் சங்கர் 57 ரன்கள் எடுத்தார். இந்த எளிய இலக்கை டெல்லி அணி 15.2 ஓவர்களில் எட்டிப்பிடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் 58 ரன்கள் (33 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். தமிழக அணி தனது அடுத்த ஆட்டத்தில் உத்தரபிரதேசத்துடன் நாளை மோதுகிறது.