கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: நியூசிலாந்து அணி அபார வெற்றி + "||" + New Zealand's team victory

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: நியூசிலாந்து அணி அபார வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: நியூசிலாந்து அணி அபார வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. #cricket #NewZealand
வெலிங்டன்,

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை நியூசிலாந்து அணி 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

இந்த நிலையில் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையேயான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று நடந்தது.

‘டாஸ்’ ஜெயித்த நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, நியூசிலாந்து வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 19.4 ஓவர்களில் 105 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக பாபர் அசாம் 41 ரன்னும், ஹசன் அலி 23 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் சேத் ரான்ஸ், டிம் சவுதி தலா 3 விக்கெட்டும், மிட்செல் சான்ட்னெர் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணி 15.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மார்ட்டின் கப்தில் கப்தில் 2 ரன்னிலும், பிலிப்ஸ் 3 ரன்னிலும், டாம் புரூஸ் 26 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். காலின் முன்ரோ 49 ரன்னும், ராஸ் டெய்லர் 22 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றனர். ஒரு விக்கெட் வீழ்த்தியதுடன் 49 ரன்கள் திரட்டிய நியூசிலாந்து வீரர் காலின் முன்ரோ ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் வருகிற 25-ந் தேதி நடக்கிறது.