கிரிக்கெட்

மிரட்டலான கேட்ச் பிடித்த பென் லாபின், ஜேக் வெதரால்டு ஜோடி + "||" + Ben Laughlin Jake Weatherald combine for best catch ever in Big Bash League

மிரட்டலான கேட்ச் பிடித்த பென் லாபின், ஜேக் வெதரால்டு ஜோடி

மிரட்டலான கேட்ச் பிடித்த பென் லாபின், ஜேக் வெதரால்டு ஜோடி
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி-20 தொடரான ‘பிக் பாஷ்’ தொடரில் அடிலெய்டி ஸ்டிரைக்கர்ஸ் அணியின் பென் லாபின், ஜேக் வெதரால்டு ஜோடி மிரட்டலான கேட்ச் பிடித்து அசத்தியது.
இந்தியாவில் நடக்கும் ஐபிஎல்., கிரிக்கெட் தொடரைப்போல, ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் பிக் பாஷ் கிரிக்கெட் தொடர் நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான தொடர் தற்போது நடக்கிறது.

இதில் மெல்போர்னில் நடந்த 35வது லீக் போட்டியில், அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் மோதின. இதில், ’டாஸ்’ வென்ற மெல்போர்ன் அணி முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய அடிலெய்டு அணி, 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்தது. எட்டக்கூடிய இலக்கை துரத்திய மெல்போர்ன் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 147 ரன்கள் மட்டும் எடுத்து 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இப்போட்டியில் மெல்போர்ன் அணியின் டுவைன் பிராவோ அடித்த பந்தை அடிலெய்டு வீரர் பென் லாபிங், பவுண்டரி லைனில் சூப்பராக தடுத்ததோடு, பந்தை அடுத்த வீரரிடம் சிறப்பாக தூக்கி வீசினார், இதை கண்டு சுதாரித்த ஜேக், அதை கச்சிதமாக பிடிக்க, சூப்பரான கேட்ச்சாக அமைந்தது.