கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி வெற்றி + "||" + Against New Zealand 20 Over cricket

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி வெற்றி
நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நேற்று நடந்தது.
ஆக்லாந்து,

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஒவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது. பஹார் ஜமான் 50 ரன்னும், பாபர் அசாம் 50 ரன்னும், அகமது ஷேசாத் 44 ரன்னும், சர்ப்ராஸ் அகமது 41 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 18.3 ஓவர்களில் 153 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் பாகிஸ்தான் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி தொடரில் பாகிஸ்தான் அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மவுண்ட் மான்கானுவில் 28-ந் தேதி நடக்கிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை