இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணியில் ஒரு வீராட் கோலி


இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணியில் ஒரு வீராட் கோலி
x
தினத்தந்தி 26 Jan 2018 7:38 AM GMT (Updated: 26 Jan 2018 7:38 AM GMT)

இந்திய கிரிக்கெட்டின் ஜூனியர் அணியில் தனது அதிரடி ரன் குவிப்பால், திரும்பி பார்க்க வைத்துள்ளார் சுபம் கில்.

நியூசிலாந்தில் நடந்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், கில்-லின் ரன் தாகம் அதிர்ச்சி அளித்திருக்கிறது மற்ற அணிகளுக்கு. அவரது பேட்டிங் ஸ்டைல் மற்றும் சில ஷாட்களை கையாளும் விதம் விராட் கோலியை, ஞாபகப்படுத்துவதாகச் சொல்கிறார்கள் சீனியர் வீரர்கள் சிலர்.

ஜூனியர் டீமின் கோச், ராகுல் டிராவிட்,  இங்கிலாந்துக்கு எதிராக கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான தொடரில், சுபல் கில் அபாரமாக ஆடினார். முதல் இரண்டு போட்டியில் முறையே, 29, 24 ரன்கள் எடுத்தார். அவர் பேட்டிங் ஸ்டைலை கொஞ்சம் மாற்றினேன். அடுத்த இரண்டு போட்டியிலும் செஞ்சுரி அடித்தார். மூன்றாவது போட்டியில் 138 ரன் எடுத்தவர், நான்காவது போட்டியில் 160 ரன்கள் குவித்து பிரமிக்க வைத்தார். மிரட்டலான வீரர் என்கிறார்.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்குப் பிறகு இந்திய அணியில் ஆட வாய்ப்பு வந்திருக்கிறது கில்லுக்கு. ஆனால், காயம் அதற்கு தடை போட, விரக்தியில் இருந்திருக்கிறார்.

பிறகு என்னையே ஊக்கப்படுத்திக் கொண்டேன். என்னை தயார்படுத்திக்கொண்டே இருந்தேன். கடின உழைப்பு தேவையாக இருந்தது. பயிற்சியில் ஈடுபட்டேன். ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் இடம் கிடைத்தது. என் கேரியரை இப்போதுதான் ஆரம்பிக்கிறேன். ஒரு வேளை, அந்த போட்டிகளில் விளையாடி இருந்தால், உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடி இருப்பேனோ, மாட்டேனோ? என்று சுபம் போடும் கில்லுக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என்கிறார்கள்.

Next Story