கிரிக்கெட்

பென்ஸ்டோக் அதிகவிலையான ரூ.12. 5 கோடிக்கு ராஜஸ்தான் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார் + "||" + Ben Stokes in #IPLAuction

பென்ஸ்டோக் அதிகவிலையான ரூ.12. 5 கோடிக்கு ராஜஸ்தான் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்

பென்ஸ்டோக்  அதிகவிலையான ரூ.12. 5 கோடிக்கு ராஜஸ்தான் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்
இங்கிலாந்து வீரர் ஆல்ரவுண்டர் பென்ஸ்டோக் ரூ.12.5 கோடிக்கு ராஜஸ்தான் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். #IPLAuction #IPL2018 #RRBen #Sokes
பெங்களூர்

11-வது ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இன்று காலை தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் ஏலத்தில் 361 இந்தியர்கள் உட்பட 578 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.  8 அணிகளின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் ஏலத்தில் பங்கேற்கின்றனர்.

முதல் வீரராக  ஷிகர் தவான் ஏலம் விடப்படுகிறார். ரூ 5.20 கோடிக்கு ஷிகர் தவானை ஐதராபாத் அணி தக்கவைத்து கொண்டது.

அஸ்வின், கெயில், ஸ்டோக் உள்ளிட்டோரின் அடிப்படை ஏலத்தொகை ரூ. 2 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

டோனி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரை சென்னை அணி ஏற்கனவே தக்கவைத்துள்ளது .

இங்கிலாந்து அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் அதிக விலைக்கு போக வாய்ப்பு உள்ளது.

அஸ்வினை ரூ.7.60 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது. சென்னை அணி அஸ்வினை ஏலம் எடுக்க ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது.

கிறிஸ் கெய்ல் ஏலம் போகவில்லை. அவரை எந்த  அணியும் கேட்கவில்லை.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் பொல்லார்ட்  ரூ5.40 கோடிக்கு   டெல்லி அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

இங்கிலாந்து வீரர் ஆல்ரவுண்டர் பென்ஸ்டோக்  ரூ.12. 5 கோடிக்கு ராஜஸ்தான் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். கடந்த முறை புனே அணியால் ரூ.14.50 கோடிக்கு ஏலம் எடுக்கபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஹானேவை ரூ.4 கோடிக்கு தக்கவைத்தது ராஜஸ்தான் அணி.

1.60 கோடிக்கு டூபிளஸ்சியை தக்க வைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் போட்டி: இந்தியா வரலாற்று வெற்றி தொடரை கைப்பற்றியது
ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் போட்டி தொடர் மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி இந்திய அணி சாதனை புரிந்து உள்ளது.
2. சாதனைகளின் தலைவன் விராட் கோலி -முன்னாள் ஜாம்பவான்கள் பாராட்டு
சாதனைகளின் தலைவன் விராட் கோலி என முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பாராட்டி உள்ளனர்.
3. ஒருநாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்து டோனி சாதனை
ஒருநாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 5-வது வீரர் மகேந்திர சிங் டோனி என்ற பெருமையை பெற்றார்.
4. இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள்
இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.
5. ”போட்டி முடிந்ததும் ஊருக்கு போயிறாத, வீட்டுக்கு வந்து என் குழந்தைகளை பாத்துக்கோ” ரிஷப் பண்டிற்கு ஆஸி கேப்டன் மனைவி அழைப்பு
இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்டிற்கு நேரமிருந்தால் குழந்தைகளை பார்த்துக்கொள்ள வருமாறு ஆஸ்திரேலிய கேப்டனின் மனைவி இன்ஸ்டாகிராமில் அழைப்பு விடுத்துள்ளார்.