கிரிக்கெட்

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான 3 வது டெஸ்ட் தொடர்ந்து நடக்கும் ஐ.சி.சி + "||" + India South Africa 3rd Test Continuing ICC

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான 3 வது டெஸ்ட் தொடர்ந்து நடக்கும் ஐ.சி.சி

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான 3 வது டெஸ்ட் தொடர்ந்து நடக்கும்  ஐ.சி.சி
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான 3 வது டெஸ்ட் போட்டி தொடர்ந்து நடக்கும் என ஐ.சி.சி தெரிவித்து உள்ளது. #ICC #SAvIND
ஜோகன்னஸ்பர்க், 

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க் நகரில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 187 ரன்னிலும், தென்ஆப்பிரிக்கா 194 ரன்களிலும் சுருண்டன. 7 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 2-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 49 ரன் எடுத்திருந்தது. முரளிவிஜய் (13 ரன்), லோகேஷ் ராகுல் (16 ரன்) களத்தில் இருந்தனர்.

இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 247 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது . இதை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 8.3 ஓவர்களில் மார்க்ராமின் (4 ரன்) விக்கெட்டை இழந்து 17 ரன்கள் எடுத்துள்ளது. டீன் எல்கர் (11 ரன்), அம்லா (2 ரன்) களத்தில் நிற்கிறார்கள். பும்ரா வீசிய பந்து டீன் எல்கரின் ஹெல்மெட்டை பலமாக தாக்கியதால், அந்த ஓவர் நிறைவு பெறாமலேயே 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் இன்று ஆட்டம் நடக்குமா என்ற கேள்விக்கு ஐ.சி.சி பதில் அளித்துள்ளது.

இது குறித்து ஐ.சி.சி இணைய தளத்தில்  கூறப்பட்டு உள்ளதாவது:-

ஆட்ட நடுவர்கள், போட்டியின் நடுவர்  இரு அணி கேப்டன்கள், பட்ஸ்மேன்    ஆகியோருடன் உரையாடிய பிறகு, ஜோகன்ஸ்பர்க் டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. பிட்சின் கண்டிஷன் குறித்து நடுவர்கள் தொடர்ந்து கவனித்து வருவர். பிட்ச் மேலும் மோசமடைந்தால் அதற்கு ஏற்றாற்போல் முடிவெடுப்பர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. 6 பந்தில் 6 சிக்சர் அடித்து சாதனை நிகழ்த்திய கிரிக்கெட் வீரர்
ஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்ரத்துல்லா சசாய் 6 பந்தில் 6 சிக்சர் அடித்து சாதனை நிகழ்த்தினார்.
2. நீங்கள் சரியாக விளையாடவில்லை என்றால் அணியில் இருக்க முடியாது : டோனிக்கு காம்பீர் எச்சரிக்கை
டோனி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி தன் மீதான விமர்சனங்களை தோற்கடிப்பார் என்று நம்புவதாக கவுதம் கம்பீர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
3. ஐதராபாத் 2-வது டெஸ்ட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்கிறது
4. 20 ஓவர் கிரிக்கெட்டில் சீனாவுக்கு எதிராக 11 பந்துகளில் வெற்றி பெற்ற நேபாளம்
பல்வேறு போட்டிகளில் தங்கத்தை குவிக்கும் சீனா கிரிக்கெட்டில் மட்டும் மண்ணை கவ்வுகிறது. 11 பந்துகளில் பந்தாடியது நேபாளம்.
5. தமிழ்நாட்டு கடற்கரையின் புகைப்படமா? காயமடைந்த மேத்யூ ஹைடனை கிண்டல்டித்த ஜாண்டி ரோட்ஸ்
அலைச்சறுக்கின் போது படுகாயமடைந்த மேத்யூ ஹைடனின் புகைப்படத்தை பார்த்த முன்னாள் வீரர் ஜாண்டி ரோட்ஸ், அவரை மோசமான விதத்தில் கிண்டல் செய்துள்ளார்.