கிரிக்கெட்

கடைசி டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 63 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது + "||" + IND v SA 3rd test India wins the final test match by 63 runs South Africa wins the series 2 1

கடைசி டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 63 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது

கடைசி டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 63 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது
ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த கடைசி டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #INDvSA

ஜோகன்னஸ்பர்க், விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் கேப்டவுனில் நடந்த முதலாவது டெஸ்டில் 72 ரன்கள் வித்தியாசத்திலும், செஞ்சூரியனில் நடந்த 2-வது டெஸ்டில் 135 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரையும் 0-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது.
இந்த நிலையில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடந்தது. 

இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 187 ரன்னிலும், தென்ஆப்பிரிக்கா 194 ரன்களிலும் சுருண்டன. 7 ரன் பின்தங்கிய நிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்சை ஆடியது. வேகப்பந்துக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் பந்து தாறுமாறாக எகிறியது. சில பந்துகள் ஒரேயடியாக கால் முட்டிக்கும் கீழாக மிகவும் தாழ்வாக வந்தன. கோலி, விஜய் ஆகியோரின் கைகளையும் பந்து பதம் பார்த்தன. ஆடுகளத்தன்மை சீரற்ற முறையில் இருப்பது குறித்து நடுவர்களும் களத்தில் அவ்வப்போது ஆலோசனை நடத்தினர். இந்திய அணி 2-வது இன்னிங்சில் 80.1 ஓவர்களில் 247 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் தென்ஆப்பிரிக்காவுக்கு 241 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

இதை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 8.3 ஓவர்களில் மார்க்ராமின் (4 ரன்) விக்கெட்டை இழந்து 17 ரன்கள் எடுத்துள்ளது. டீன் எல்கர் (11 ரன்), அம்லா (2 ரன்) களத்தில் நிற்கிறார்கள். பும்ரா வீசிய பந்து டீன் எல்கரின் ஹெல்மெட்டை பலமாக தாக்கியதால், அந்த ஓவர் நிறைவு பெறாமலேயே 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. மோசமான சூழ்நிலை மைதானத்தில் காணப்பட்டதால் ஆய்வு செய்யப்பட்டது. ஆட்டம் முன் கூட்டியே நிறுத்தப்பட்டது. டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு இன்னும் 224 ரன்கள் தேவைப்படுகிறது என்ற நிலையில் 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது.

பரபரப்பான கட்டத்தை எட்டிய இந்த டெஸ்டில் வெற்றிக்கனியை இந்தியா பறித்தது.  இந்திய அணியில் முகமது சமி 5 விக்கெட்களை எடுத்து தென் ஆப்பிரிக்காவிற்கு சவாலை ஏற்படுத்தினார். இந்திய பந்து வீச்சாளர்கள் தென் ஆப்பிரிக்காவை பதம் பார்த்தனர். ஆனால் டீன் எல்கர் மட்டும் கடைசிவரையில் மைதானத்திற்கும், பந்துவீச்சுக்கும் சவாலாகவே காணப்பட்டார். டீன் எல்கர் ஆட்டம் இழக்காமல் 86 ரன்களுடன் களத்தில் இருந்தார். தென் ஆப்பிரிக்கா 73.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 177 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. தென் ஆப்பிரிக்கா ஆதிக்கம் செலுத்த முயன்றாலும் இந்தியா கடுமையான நெருக்கடியை அந்த அணிக்கு கொடுத்தது.
 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட்: நேப்பியரில் நாளை நடக்கிறது
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் நாளை நடக்கிறது.
2. விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் ஹசிம் அம்லா
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் சாதனையை தென் ஆப்பிரிக்க அணியின் துவக்க வீரர் ஹசிம் அம்லா தகர்த்தார்.
3. மெல்போர்ன் கிரிக்கெட்: இந்தியாவுக்கு 231 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா
மெல்போர்னில் நடைபெற்று வரும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 231 ரன்களை ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்துள்ளது.
4. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி முதலில் பந்து வீச்சு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது.
5. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி அறிவிப்பு
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித்தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.