கிரிக்கெட்

இந்திய அணியில் மீண்டும் ரெய்னா + "||" + Raina is back in the Indian team

இந்திய அணியில் மீண்டும் ரெய்னா

இந்திய அணியில் மீண்டும் ரெய்னா
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணியில் மீண்டும் ரெய்னா
புதுடெல்லி,

டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி அடுத்து தென்ஆப்பிரிக்காவுடன் 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 1-ந்தேதி டர்பனில் நடக்கிறது. ஒரு நாள் போட்டி முடிந்ததும் இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா-தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி பிப்ரவரி 18-ந்தேதி ஜோகன்னஸ்பர்க்கில் நடக்கிறது.

20 ஓவர் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. உடல்தகுதி சோதனையில் தேறியது மட்டுமின்றி, சமீபத்தில் முஸ்தாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்டில் சதம் விளாசி அசத்திய பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா ஓராண்டு இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பி இருக்கிறார். இந்திய அணி வருமாறு:-

விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், சுரேஷ் ரெய்னா, டோனி, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, மனிஷ் பாண்டே, அக்‌ஷர் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா, ஜெய்தேவ் உனட்கட், ஷர்துல் தாகூர்.