கிரிக்கெட்

கடைசி ஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்திடம் ஆஸ்திரேலியா தோல்வி + "||" + Last one day cricket To the UK Australia failed

கடைசி ஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்திடம் ஆஸ்திரேலியா தோல்வி

கடைசி ஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்திடம் ஆஸ்திரேலியா தோல்வி
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் நேற்று நடந்தது.
பெர்த்,

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 47.4 ஓவர்களில் 259 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது. ஜோ ரூட் 62 ரன்களும், ஜாசன் ராய் 49 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் 31 வயதான ஆண்ட்ரூ டை 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலியா 48.2 ஓவர்களில் 247 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோனிஸ் 87 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஸ்டீவன் சுமித் (12 ரன்), டேவிட் வார்னர் (15 ரன்) ஏமாற்றம் அளித்தனர். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டாம் குர்ரன் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

12 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்ற இங்கிலாந்து அணி ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.